2020-04-15

அந்தக் கேரம்போர்டு மட்டும் இல்லன்னா...

#CoronaQuarantine

FB_IMG_1586966312915.jpg

2020-04-15

"எதை நீ காப்பாற்றுகிறாயோ, அதுவே உன்னை காப்பாற்றும்..." -Abdulkader Jailane

#CoronaQuarantine

FB_IMG_1586966125028.jpg

2020-04-14

பேரப் பாத்தேல்ல... 'சார்,வரி!' வருடமாம்... இந்த வருஷம் அமோகமா இருக்கப்போவுது... Cheers...

#CoronaQuarantine

FB_IMG_1586485379406.jpg

2020-04-14

தல பொறந்த நாளும் lockdownல தான்... கூட்டம் போடாத போ போ... போய் உன் postஅ எல்லாம் அழி...

#CoronaQuarantine

FB_IMG_1586840328012.jpg

2020-04-14

Taskஏ இல்ல... Rejected...

#CoronaQuarantine

20200414_104802.jpg

2020-04-14

ஷாமினி மேடம்... ஏதோ ஆணழகன் போட்டி நடத்துறீங்களாமே... அண்ணன் கார்த்திக் ரெடியாகிட்டாரு... பரிசுக்கோப்பைய எடுத்து வைங்க... இதோ வந்துகிட்டே இருக்கோம்...

#CoronaQuarantine

images (1).jpeg

2020-04-13

ஏன் இல்லாம... இந்த weekendக்கும் task குடுத்தாரு... நீங்கதான் யாருமே நகைய கழட்டித் தரல...

#CoronaQuarantine

FB_IMG_1586731680767.jpg

2020-04-13

என்னது, ஏப்ரல் முப்பதா..? நா எங்க ஜீ சொன்னாத்தான் கேப்பேன்...

#CoronaQuarantine

FB_IMG_1586789396281.jpg

2020-04-13

எங்கோ ஏதோ ஒரு WhatsApp groupல நடக்குதுன்னு போஸ்ட் படிச்சு smiley போட்டுக்கிட்டு இருந்தேன்... இப்ப எங்க குரூப்'லயே... ஓ மை காட்...

#CoronaQuarantine

FB_IMG_1586790890399.jpg

2020-04-13

அவரா announce பண்றதுக்கு முன்னாடியே எல்லாரும் ஏப்ரல் 30னு declare பண்ணிட்டீங்க... இப்ப வெறுத்துப் போயி இன்னொரு பத்து பதினஞ்சு நாள் சேத்து, May 15 வரைக்கும் lockdownனு சொல்லப் போறாரு பாரேன்... சுத்த ego புடிச்சா ஆளுடா அந்தாளு...

#CoronaQuarantine

FB_IMG_1586356598057.jpg

2020-04-12

MC: Saranji VS

When the Lockdown & WFH Gets Over...

#CoronaQuarantine

FB_IMG_1586701367388.jpg

2020-04-12

Rajan Radhamanalan

லாக் டவுன்றது மொத்தமாவே ப்ரிவிலேஜ்டு செக்டாருக்கு வொர்க்கிங் க்ளாஸ்கிட்டருந்து நோய் பரவிடாம தடுக்கறதுக்கான திட்டமா தான் இருக்கு.  நோயைக் கொண்டு வந்து பாமர ஜனங்களுக்கு பரப்பிவிட்ட அந்த மேல்தட்டு மக்கள் இப்ப தங்களோட சேமிப்ப கரைச்சுகிட்டாவது நார்மல் வாழ்க்கைய கதவச்சாத்திட்டு வாழ ஆரமிச்சிட்டாங்க. கவனிச்ச வரைல அவங்களுக்கு இது இன்னும் சில மாதங்களுக்கு நீடிச்சாலும் சந்தோஷம் தான். 

ஆனா அன்றாடங்காய்ச்சிகளோட நிலைமையப் பாருங்க. அவங்களால இன்னொரு மாசத்த வருமானமில்லாம எப்படி சமாளிக்க முடியும்னு வேண்டாம்? லாக்டவுன முதல்தடவை அறிவிச்சப்ப கூட சில குரல்கள் இவங்களுக்கு ஒரு வழிய பண்ணனும்னு  எழுந்துச்சு. ஆனா இப்ப அதக்கூட காணோம். ஒரே மனசா லாக் டவுன் நீட்டிப்புக்கு நிபந்தனையே இல்லாம ஆதரவு தர்றாங்க.  அதாவது என்னோட சுமைய நீயும் சேந்து சுமக்கணும்., உன்னோட சுமைய நீ மட்டுமே சுமந்துக்கணும்ன்ற மாதிரியான ஏற்பாடு இது. 

லாக் டவுன் கட்டாயம். ஆனா வாடகை வாங்காம இருக்கறது சஜசன்.  நிறுவனங்கள மூடணும்ன்றது கட்டாயம் ஆனா ஊழியர்களுக்கு சம்பளத்த நிப்பாட்ட வேணாம்ன்றது சஜசன். அட அரசாங்கமே நேரடியா சம்மந்தப்படற மின்சாரக் கட்டணம் மாதிரியான விஷயங்கள்ல கூட இன்னமும்  விலக்களிக்களிக்கற உத்தேசத்தக் காணல. 

யூரோப்லயும் அமெரிக்காலயும் பரவின வேகத்துக்கு இங்க பயந்தது நியாயம். இப்ப இங்க அந்த வைரஸோட தாக்கம் பெரிய அளவுல இல்லைன்ற நிலைல  லாக் டவுனே இல்லாம இருந்தா எலைட்டுகள் இன்னும் இரு மடங்கு செலவு பண்ணிட்டு வீடடைஞ்சு இருக்கலாம். எளிய மக்கள் சாகறதுக்கு இருக்கற எத்தனையோ காரணங்களோட இதுவும் ஒண்ணாப் போயிடும். இருக்கறவங்க வயித்தையாவது நிரப்ப முடிஞ்சிருக்கும். 

வாதையில் உழல்றது அவங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்ல ஆனா அதுலயாவது ஒரு ஈக்வாலிட்டி இருக்கணும்.   வர்க்கம் பார்க்கத் தெரியாத வைரஸுடைய தாக்குதலக் கூட அரசாங்கம் அழகா வடிகட்டி விளிம்பு நிலைல இருக்கவனுக மொதல்ல சாகட்டும்ன்ற மாதிரி பண்றத ஏத்துக்கவே முடியலை. அப்பார்ட்மெண்ட் பால்கனி பாடுகளோட தீபத்துக்கு வேணா ஒரு ஹோப் இருக்கலாம். ரோட்டுல  டெண்ட் அடிச்சி வாழறவனும் மெழுகுவர்த்தி தூக்கிட்டு நிக்கணும்னு சொல்றது இல்லாத ஊருக்கு வழி காட்டி ஏமாத்தற வேலை.

#CoronaQuarantine


2020-04-11

வேத பழமையான சௌராஷ்டிரம்

-தெஸ்மா. T.R. பாஸ்கர்

நன்றி: முஹம்மது யூசுப்

https://nvkarthik.com/வேத-பழமையான-சௌராஷ்டிரம்/

தாய்மொழி யாருக்குத்தான் பிடிக்காது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது establish ஆன மொழிகளில் அழியும் நிலையில் உள்ளது சௌராஷ்டிரம் என்று எங்கோ படித்த ஞாபகம். எழுத்து வழக்கத்தில் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழியானது அழிவதில் ஆச்சரியமில்லை. சௌராஷ்டிர மொழி அந்த extinction வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளதாம் (முதலில் இருப்பது துளு மொழியாம்). ஆனாலும் சௌராஷ்டிர மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது குஜராத்தை சேர்ந்தவர்களா என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படுவது உண்டு. நெசவுத் தொழிலை குலத் தொழிலாக கொண்ட சமூகம் குஜராத்தில் இருந்து கிளம்பி இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமே பட்டுநூல்காரர் என்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்கள். வேறு எந்த மாநிலமும் சௌராஷ்டிரா சமூகத்திற்கு அங்கீகாரம் அளித்ததாக தெரியவில்லை. அந்த வகையில் நான் தமிழ்நாட்டுக்காரனாகவே உணர்கிறேன்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லை எனில், மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் சௌராஷ்ட்ரா சமூகம் அங்கீகாரமின்றி நாடோடி சமூகமாகவே இருந்திருக்கும். ஜாம்நகரில் வேலைக்கு சேர்ந்து குஜராத் சௌராஷ்டிரா பகுதிகளை சுற்றிப் பார்த்த பொழுதும் எனக்கு அங்கு எந்த ஒரு ஒட்டுதலும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தார்கள் இன்னும் நெசவு தொழில் செய்கிறார்கள். மாமா எல்லாம் இன்னும் சேலை வியாபாரம் தான் செய்கிறார்கள். என் மாமனார் dyeing industry நடத்தினார். இப்பொழுது எல்லாம் தொழிலை விட்டுவிட்டு மாத சம்பளத்திற்கு படித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். தறி நெசவு செய்யும் சொந்தங்கள் பரமக்குடி எமனேஸ்வரம் மதுரை பகுதியில் இருந்தாலும், அவர்களும் இதிலிருந்து வெகு சீக்கிரம் வெளிவந்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. லாபம் இல்லை அவ்வளவுதான். சரி இந்த சமூகம் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரும் பெரிதாக இதை எழுதி வைத்ததாக தெரியவில்லை. சரித்திரம் இன்றி இனம் அழிந்து தான் போகும். இந்நிலையில் முஹம்மது யூசுப் இந்த சமூகம் பற்றிய ஒரு சிறிய புத்தகத்தை பற்றி எழுதியிருந்தார். Comment செய்தபோது அந்தப் புத்தகத்தை ஈமெயிலில் அனுப்பியும் வைத்தார்.

'வேத பழமையான சௌராஷ்டிரம்' மிகச்சிறிய ஒரு புத்தகம். ஒரே நாளில் படித்து முடிந்துவிட்டது. சௌராஷ்ட்ரா சமூகம் பற்றிய சில விஷயங்கள் இதில் உள்ளது. ஆசிரியர் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் புத்தகம் நிறையவே exaggerate செய்துள்ளது. நிறைய விஷயங்கள் நம்ப கஷ்டமாகவே உள்ளன. சுவாரசியமும் குறைவுதான். தகவல்கள் கோர்வையின்றி வழவழா கொழகொழா என்று, how to say, it's just all over the place. இந்தப் புத்தகத்தை ஒரு referenceஆக எடுத்துக்கொள்ள கூட ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். சௌராஷ்டிர மக்கள் வேண்டுமானால் இதைப் படித்து தங்கள் egoவை கொஞ்சம் boost up செய்துகொள்ளலாம். மற்றபடி, கஷ்டம்தான்.

கொசுறு தகவல்: யூசுப் தனது அடுத்த (மூன்றாவது) புத்தகத்தில் சௌராஷ்டிரா இழையோட எழுதி இருக்கிறாராம். அதனால் சௌராஷ்டிரா பற்றி தேடித்தேடி படிக்கிறார். I am waiting for his book, because I know his writing.

My verdict: (சௌராஷ்டிரர்கள்) ஒரு முறை படிக்கலாம்.

20200411_132736.jpg

2020-04-11

எதையாச்சும் சொன்னாலே எக்குத்தப்பா‌ பண்ணுவானுங்க... எதுவுமே சொல்லலை... என்ன பண்ணப்போறானுங்களோ... Waiting for Sunday evening...

#CoronaQuarantine

FB_IMG_1586361927556.jpg

2020-04-10

Actually, she sincerely works for home and I sincerely WFH...

YouTube: WFH...

#CoronaQuarantine

#இல்லறமதிகாரம்

VideoCapture_20200410-094111.jpg

2020-04-10

ராஜ்ஜியத்தின் நோக்கம் என்ன?

ஜனங்களுக்கு நன்மை செய்வதுதான். ஜனங்களை சந்தோஷப்படுத்துவது அல்ல. சந்தோஷப்படுத்த வேண்டியதுதான். ஆனால், அந்த சந்தோஷம் நன்மையினால் விளைவதாய் இருக்கவேண்டும். வெறும் சந்தோஷமாய் இருக்கக் கூடாது. எந்த ராஜ்ஜியம், ஜனங்களுடைய கவனத்தை ராஜ்ய விவகாரங்களில் இருந்து திசைதிருப்பி வைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை களியாட்டங்களில் அல்லது வேறு விதத்தில் அற்ப சந்தோஷத்தை அளித்து அவற்றிலேயே ஈடுபடுத்தி வந்தால் அந்த ராஜ்ஜியம் காலக்கிரமத்தில் அழிந்துபோகும். அந்த அற்ப சந்தோஷமே ஜனங்களை அழித்துவிடுகிறது. எனவே நீண்ட கால நோக்கில் நன்மை ஏற்படுத்தும் செயல்களை ராஜ்ஜியம் செய்ய வேண்டும்.

-தெஸ்மா. T.R. பாஸ்கர்

வேத பழமையான சௌராஷ்டிரம்

images (1).jpeg

2020-04-10

//எது எப்படியோ, எங்க ஆளுங்க எது நாட்ல safetyனு தெரிஞ்சுக்கிட்டு அதுல ரொம்ப தெளிவா இருந்திருக்காங்க...//

மதுரையில் 1627ல் பார்த்திப வருடம் ஆவணி மாதம் பௌர்ணமியில் சௌராஷ்டிரர்கள் காயத்ரி ஜெபம் செய்து பூணூல் அணிந்தனர். தமிழக வழக்கப்படி பிராமணர்களே பூணூல் அணிய வேண்டுமாதலால், மதுரை அரசி மங்கம்மாளின் கோட்டை அதிகாரி ஜோஸ்யம் வெங்கட்ரங்கய்யர் சௌராஷ்டிரர்களை கைது செய்தார்.

வெங்கட்ரங்கையரின் குற்றத்தை கேட்ட மங்கம்மாள், பாபன்ன ஸோமாஜியை அழைத்து தீர்வு காணும்படி பணித்தார். பல பெரியோர்களை அழைத்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஸ்ரீரங்கம் குருநாத ஸ்வாமி தேவஸ்தானத்தில் கூடி விவாதித்தனர்.

அங்கு கவிதார்க்க ஸிம்ம ஆசாரி சுவாமிகள், தம்டம் வெங்கட கிருஷ்ணய்யங்கார், அனந்தய்யங்கார், சடகோபாலாச்சாரி சுவாமிகள், சிங்கபிரான் தீக்ஷிதர், ஸ்மிருதி அய்யனய்யங்கார் சாஸ்திரி, நித்தியானந்த சாஸ்திரி, திருமல சாஸ்திரி, ராம சாஸ்திரி ஆகியோர் சௌராஷ்டிரர்களை அழைத்து விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில் சௌராஷ்டிர தேச வழக்கப்படி அனைவரும் பூணூல் அணியலாம் என தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைப் போல் சில ஜாதிகளே அணியலாம் என்ற கட்டுப்பாடு எங்களுக்கு கிடையாது. நாங்கள் நெசவுத் தொழில் செய்யும் ஜாதி எனினும் பூணூல் அணிய தடை கிடையாது என வலியுறுத்தினர்.

இதன் முடிவில் மங்கம்மாள் சௌராஷ்டிரர்களுக்கு பாதுகாப்பு அளித்து நல்லபடியாக வாழுங்கள் என விடுதலையும் கொடுத்தார்.

-தெஸ்மா. T.R. பாஸ்கர்

வேத பழமையான சௌராஷ்டிரம்

FB_IMG_1586535384643.jpg

2020-04-09

RIP statistics...

(Note before you start: World population as on date is around 780 crore...)

40% of INR 30,000 crore (i.e. INR 12,000 crore) is credited to 20,000 crore women... Meaning 60 paise/account... Jan Dhan scheme...

8000 crore people get INR 5000 Crore in their account... Meaning of 62.5 paise/account... Ujjwala scheme... அடுத்த மூணு மாத gas cylinderக்காக...

3000 crore underprivileged (senior citizens, physically challenged, mentally challenged, etc.) people get INR 3000 crore in their account... Meaning INR 1/account...

ராமானுஜம் தற்கொலை பண்ணிக்கலாம்...

நிஜமாகவே இது டைம்ஸ் ஆப் இந்தியா data தானா... Times of India இவங்க மேல மானநஷ்ட வழக்கு போடலாம்...


#CoronaQuarantine

VideoCapture_20200409-191808.jpg

2020-04-09

Statistics'பா...

#CoronaQuarantine

FB_IMG_1586442699242.jpg

2020-04-09

Best ever "Dad's Little Princess"...

#CoronaQuarantine

VideoCapture_20200409-191808.jpg

2020-04-07

The audacity to threaten India of retaliation...

#CoronaQuarantine

//US President Donald Trump has said "there may be retaliation" if India does not agree to export hydroxychloroquine, a key anti-malaria drug believed by many to be effective in the treatment of coronavirus. His remarks come nearly two weeks after the government banned export of the drug as experts test its efficacy in helping treat COVID-19 patients.//

//"I don't like that decision, I didn't hear that that was his (Prime Minister Narendra Modi) decision. I know that he stopped it for other countries. I spoke to him yesterday, we had a very good talk and we'll see whether or not that's his... For many years, they've been taken advantage of the United States on trade. So I would be surprised if that were his decision. He'd have to tell me that. I spoke to him Sunday morning, called him, and I said, we'd appreciate you allowing our supply to come out. If he doesn't allow it to come out. That would be OK. But of course, there may be retaliation. Why wouldn't there be," the US President said.//

COVID-19: Trump Talks "Retaliation" If India Rejects Export Of Key Drug

20200407_093547.jpg

2020-04-07

Chennai Municipal Authorities had placed a quarantine sticker outside the flat of Air India Pilot, Captain Manish Sharma after he had operated an international evacuation flight. 

Instead of any societal backlash, his colony residents placed another sticker hailing him. ❤️❤️ 

#COVID19

#CoronaQuarantine

FB_IMG_1586233659791.jpg

2020-04-07

ஐயா... அப்படி நினைக்காதீங்கய்யா... அவன் hydroxychloroquine கேட்டானா, குடுத்துட்டேன்... இதே அவன் கோமியம் கேட்டுருந்தா, க்காலி, அங்கயே வெட்டிப்போட்டுருப்பேங்கய்யா... வெட்டிப்போட்டுருப்பேன்...

#CoronaQuarantine

images (1).jpeg

2020-04-07

#CoronaQuarantine

Jokes apart, Hydroxychloroquine மலேரியா மாத்திரை... இங்க கொசு நிறைய இருக்குன்னு நாம தயாரிச்சு வச்சிருக்கோம்... அத நம்மகிட்ட இருந்து அமெரிக்கா மிரட்டி புடுங்குறத பாத்தா எனக்கு இதான் ஞாபகத்துக்கு வருது...

images (1).jpeg

2020-04-06

பட்டாசு என்பதே சைனீஸ் கண்டுபிடிப்பு தானே...

முள்ளை முள்ளால் எடுப்போம்... வைரத்தை வைரத்தால் அறுப்போம்...

#CoronaQuarantine

FB_IMG_1586149266049.jpg

2020-04-05

புஸ்வாணம் கொளுத்தலாமா...?

#CoronaQuarantine

images (2).jpeg

2020-04-05

அங்க ஒன்பது மணிக்கு லைட் ஆஃப் பண்ணிருக்காய்ங்களாம்... கொரனா செத்துப் போகுதாம்... இப்பத்தான் சிங்கப்பூர் சித்தப்பா போன் பண்ணாரு...

#CoronaQuarantine

FB_IMG_1586091416192.jpg

2020-04-03

ஆனா விதை, நம்ம சிகா'ண்ணா போட்டது...

images (1).jpeg

2020-04-03

ஐடியா கொடுத்து, எழுதித் தர்றவங்களை முதல்ல கட்டிப்போடணும்...

FB_IMG_1585886146152.jpg

2020-04-03

நம்மைப்போல கொரனாவை யாரும் இத்தனை அவமானப்படுத்தியிருக்க மாட்டார்கள்...


2020-04-03

"Do I really look like a guy with a plan?"

Joker

images (1).jpeg

2020-04-03

#CoronaQuarantine

FB_IMG_1585901772237.jpg

2020-04-03

This time, she may probably burn down a fire station...

PS: Listen in mute... Dare not use earphones...

#CoronaQuarantine

YouTube: Go Corona Go...

VideoCapture_20200403-141327.jpg

2020-04-03

Thanks: Saravanan MK

கடிக்கும்வல் லரவும் கேட்கும்

மந்திரம் களிக்கின் றோயை

அடுக்கும்ஈ தடாதென்று ஆன்ற

ஏதுவோடு அறிவு காட்டி

இடிக்குநர் இல்லை; உள்ளார்

எண்ணிய தெண்ணி உன்னை

முடிக்குநர் என்ற போது

முடிவின்றி முடிவ துண்டோ? 

(கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: காட்சிப் படலம்: 5311)

பொருள்: கொடிய நாகமும் அமைச்சர் ஆணையிட்டால் அடங்குமே! நெஞ்சில் கொடுமையுள்ள உன்னை நெறிப்படுத்தவல்ல அமைச்சர்கள் இந்நாட்டில் இலரே! மயங்கித் திரிகின்றாய் நீ! செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது என்று ஆராய்ந்து உனக்கு இடித்துரைப்பவர் எவரும் இலர்; இந்த நாட்டில் அமைச்சர் என்று பெயர் படைத்தவர்கள் நீ எண்ணியபடியே எண்ணும் அடிமையுள்ளம் உடையவர்கள். அன்னாரை அமைச்சர்களாகக் கொண்ட உனக்கு அழிவு வரும் என்பதில் ஐயம் உண்டோ! 

-----

இதை படித்தவுடன் எனக்கு நினைவில் வந்த திருக்குறள்,

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்:448)

கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.


2020-04-03

An engineering challenge await this Sunday... Prepare for possible outages / blackout...

//What happens when 130 crore Indians switch off lights in their homes, together?

"It's like suddenly putting a brake of a car in motion, or suddenly pushing the accelerator to the floor...it is difficult to predict how the car will exactly behave.  It is the same predicament, but much more complicated, that we all are facing," said a senior executive from the power sector.

"If it goes too high (when the supply is too high) or too low (when the demand goes haywire), then lines can trip, leading to outages," he said.

Something similar to what happened in the 2012 blackout - the biggest in the world - when a sudden surge in demand led to tripping and almost 600 million Indians went without electricity.

On April 5, instead of demand, the danger is of supply surging and disrupting the frequency when Indian switch off lights all at once at 9 pm. This could trip the line, and lead to a blackout.//

PM Modi's solidarity call: Here's why the 9-minute challenge is 'unprecedented' for the power industry

20200403_173339.jpg

2020-04-01

ஹலோ பாஸ், வேலை முடியலேன்னு குதிச்சா... மெயில் பண்ணிருக்கேன்... உங்களையும் Cc'ல வச்சிருக்கேன்... நடக்கும் நடக்கும்...

#WFH பரிதாபங்கள்

FB_IMG_1585708452323.jpg

2020-03-31

As RBI slashes Repo Rate by 75 basis points to 4.4%, the fallout be like...

//The Centre has slashed interest rates on small savings schemes by 70 to 140 basis points (bps) for the April-June quarter of the financial year 2020-21.//

//Interest rates on public provident fund the quarter have been brought down by 80 bps to 7.1 percent while the same for Kisan Vikas Patra have slashed by 70 bps to 6.9 percent. Meanwhile, after a cut of 0.8 percent, the interest rate on the girl child-focussed Sukanya Samriddhi scheme now stands at 7.6 percent.//

//In case of the National Savings Certificate, the government has brought down interest rates by a staggering 110 bps to 6.8 percent. The same for 5-year recurring deposits and 5-year time deposits have been slashed by 140  bps and 100 bps to 5.8 percent and 6.7 percent respectively.//

20200331_221229.jpg

2020-03-30

I love my wife...

#CoronaQuarantine

FB_IMG_1585551487511.jpg

2020-03-30

WFH extended upto April 15, 2020...

#CoronaQuarantine

FB_IMG_1585583381715.jpg

2020-03-29

The very first page of Prime Minister's National Relief Fund...

About PMNRF

Meanwhile, PM-CARES Fund (PM’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund) is also established now to collect funds for assistance and relief of people in emergency situations... You may please donate generously...

Appeal to generously donate to ‘PM’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund)’

#CoronaQuarantine

20200329_131256.jpg

2020-03-28

பர்ஸ்ட் கொரண்டைன் வீக்கெண்ட்... விடியக்காலை‌ 6 மணிக்கே தூக்கம் போயிட்டு...

#CoronaQuarantine

20200328_070241.jpg

2020-03-28

Migrant workers walk to their native places amid the nationwide complete lockdown, on the NH24 near Delhi-UP border in New Delhi. (Pics: DH & Reuters)

Muhammad bin Tughlaq would be smiling...

inCollage_20200328_074024519.jpg

2020-03-28

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

அடியேய்... பிள்ளைங்க அசந்து தூங்கிட்டாங்க‌ போல இருக்...

டாடீஈஈஈஈஈ...

#CoronaQuarantine

FB_IMG_1585363044215.jpg

2020-03-28

Muralidharan Kasi Viswanathan

மாபெரும் இந்தியத் துயரம்

---------------------

"என்னிடம் பணம் இல்லை. என் வீட்டு உரிமையாளர் என்னிடம் வாடகை கேட்டார். என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை என்றால், வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறினார். நான் வேலை பார்த்த இடத்திலும் காசு இல்லை என்று கூறிவிட்டார்கள். எனவே நான் என் ஊருக்குப் போவதுதான் நல்லது. ஆனால், நடந்து செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" என்கிறார் 35 வயதான தன்ராஜ்.

மேற்கு தில்லியின் நஜப்கர் பகுதியிலிருந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஃபதேப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல 570 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். கட்டுமான இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பொறுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த அவர், நாள் ஒன்றுக்கு 300- 400 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தார். 

"நான் அகமதாபாத்தில் இருந்து வருகிறேன். என் வீடு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கிறது. எனக்கு அகமதாபாத்தை விட்டு தற்போதைக்கு வர விருப்பம் இல்லை என்றாலும். என்னை வேலையில் வைத்திருந்த நபர் காசு கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த மூன்று நாட்களாக சரியாக சாப்பிடவில்லை" என்று கூறுகிறார் ராஜஸ்தான் ஜெய்பூரில் தற்போது இருக்கும் ஒரு கூலித் தொழிலாளி.

தில்லியிலும் தில்லியைச் சுற்றிலும் பணியாற்றும் உ.பி., ராஜஸ்தான், ம.பி., பிஹார் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்களின் கதை ஏறக்குறைய இப்படித்தான் இருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் மூடப்பட்டதும் இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக நடக்க ஆரம்பித்துள்ளனர். 

தில்லியில் வாழும் காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பலரும் அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக மூட்டை முடிச்சுடன் நேற்று தில்லியிலிருந்து புறப்பட்டு காசிபூர் வழியாக உத்தரப்பிரதேசத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 10,000 பேர் தில்லி எல்லையைக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தில்லி - உத்தர பிரதேச எல்லையான காசிபூரில் அரசு ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துக்காக நூற்றுக்கணக்கில் ஆட்கள் காத்திருப்பதாக ஏஎன்ஐ கூறுகிறது. 

இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் உண்ண உணவு மற்றும் அருந்த தண்ணீர் இல்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், பயணம் மேற்கொண்டிருக்கும் தொழிலாளர் மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி பயணிக்கும் அவல ஏற்பட்டதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. இது மிகப்பெரிய குற்றம். பெரிய துன்பம் ஏதும் நேர்வதற்குள் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ்: 900 கி.மீ நடந்து சொந்த ஊருக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் - இந்திய சோகம்

inCollage_20200328_155957611.jpg

2020-03-28

ஏற்கனவே பயந்து போயிருக்கோம்டா... படுத்தாதீங்கடா...

#CoronaQuarantine

YouTube: கொரனா கொர்ர்ர்...

VideoCapture_20200328-163606.jpg

2020-03-27

VC: Winston Fernando

கொரனா குத்து...

YouTube: கொரனா குத்து...

VideoCapture_20200327-104345.jpg

2020-03-27

First mega-serial victim of கொரனா...

கல்யாணப் பரிசு ended today...

#CoronaQuarantine

images (1).jpeg

2020-03-27

அடுத்த ரெண்டு நாள் லீவு... WFH கூட இல்ல...

#CoronaQuarantine

FB_IMG_1585311151768.jpg

2020-03-27

கொரண்டைன் காலத்துல கஷ்டப்பட்டு WhatsApp நம்பர் தேத்தி meme அனுப்பினா, அவங்க எல்லாரும் அத சொசைட்டி லேடிஸ் குரூப்ல போடுறாங்க... இன்னைக்கு மூணு பேர் ஒரே meme ஃபார்வேர்ட் பண்ணிருக்காங்க... தலைவி and two others...

இப்ப வீட்ல என்னை advice பண்ணி வச்சிருக்காங்க... மொபைலை பிடிங்கி, கைய ஒடிச்சு உக்கார வைக்கணுமாம்...

#CoronaQuarantine

#APU

FB_IMG_1585321636323.jpg

2020-03-26

இதோ, 21 நாளில் கிட்டத்தட்ட 10% கடந்து விட்டோம்...

Quarantineஇன் முதல் இலக்கு பொழுதுபோக்கு அல்ல... தன்னைத்தானே busyயாகவும் occupiedடாகவும் வைத்துக் கொள்ளுதல்... மேலும் வேலைகளை பகிர்ந்து கொண்டு தன் வேலையை தானே செய்தல்... அதன்படி, வீட்டில் நாங்களே சில விதிகள் போட்டுக்கொண்டோம்...

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியில் இருந்து பாலும், காய்கறிகளும் வாங்கி வருவது என் பொறுப்பு... சமையல் சசி பொறுப்பு... அவரவர் சாப்பிட்ட தட்டு டம்ளரை அவங்களே கழுவி வைக்கணும்... விருப்பப்பட்டால் ஒன்றிரண்டு பாத்திரங்கள் extra கழுவலாம், அம்மாவுக்கு உதவியாக இருக்கும்... இரண்டு நாட்களாக நான் கவனித்த வரையில், எதுவும் சொல்லாமலேயே சூர்யாவும் வர்ஷாவும் ஒன்றிரண்டு பாத்திரங்களை extraவாக கழுவி வைக்கவே செய்கின்றனர்... மீதி சமையல் பாத்திரங்கள் சசி பொறுப்பு... துணிகளை துவைப்பது என் வேலை (வாஷிங் மெஷின் இருக்க என்ன கவலை)... அவரவர் துணியை மடித்து வைப்பது அவரவர் பொறுப்பு... பாத்ரூம் சுத்தமாக வைத்திருப்பது சசி பொறுப்பு... கழிவறையை கழுவி சுத்தமாக வைத்திருப்பது என் பொறுப்பு... அறைகளையும் நான்கு பேரும் பிரித்துக் கொண்டோம்... ஹால் எனக்கு, சமையலறை சசிக்கு, பெட்ரூம் சூர்யாவுக்கு மற்றும் study room வர்ஷாவுக்கு... வேலைகளை பகிர்ந்து கொண்டு பிசியாக இருந்தாலே நாட்களை ஓட்டிவிடலாம் போல...

பிகு: பெட்ரூமுக்கு சூர்யா வகுத்த rule தான் படத்தில் இருப்பது...

பிகு2: முத்தொள்ளாயிரம் வாசித்து வீடியோ பதிவு போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... Be careful...

#CoronaQuarantine

FB_IMG_1585236888130.jpg