CJ7 - Boney M
CJ7 என்றொரு குழந்தைகள் படம்... சைனீஸ் படமாம்... நேற்றுவரை, கொரியன் படம் என்றே நினைத்திருந்தேன்... அதில் டிக்கி (Dicky) என்ற ஒரு தாயில்லாத சிறுவன், தன் தந்தையோடு வசித்துக் கொண்டிருப்பான்... சித்தாள் வேலை செய்யும் அவர், விலையுயர்ந்த ரோபோட் நாய்க்குட்டி கேட்டு அடம் பிடிக்கும் டிக்கிக்கு குப்பைத்தொட்டியில் இருந்து ஒரு நாய் போன்ற பஞ்சு பொம்மையை கொண்டுவருவார்... அது பார்த்தால் வெளி கிரகத்தில் இருந்து வந்த ஒரு சக்திவாய்ந்த cute நாய்க்குட்டியாக இருக்கும்... டிக்கியோடு சேர்ந்து அத்தனை சேட்டை செய்யும் அந்த நாய்க்குட்டி... அதன் தோழனாக, மிக சந்தோஷமாக இருப்பான்... ஆனால், வாழ்க்கை எப்பொழுதும் யாருக்கும் சந்தோஷம் மட்டுமே தருவதில்லையே... ஒரு விபத்தில் டிக்கியின் தந்தை இறந்து போக, அனாதையாகி மனதளவில் நொறுங்கிப் போகும் டிக்கியை காணும் அந்த நாய்க்குட்டி, தன் சக்தி அனைத்தையும் திரட்டி டிக்கியின் தந்தைக்கு உயிரூட்டிவிட்டு இறந்து போய்விடும்... தந்தை உயிரோடு திரும்ப வந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நாய்க்குட்டியின்றி உடைந்து போயிருப்பான் டிக்கி... அந்த நாய்க்குட்டி பொம்மையை கழுத்தில் கட்டிக்கொண்டு அமைதியாக சுற்றிக் கொண்டிருப்பான், எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல... ஆனால் கடைசியில் வெளி கிரகத்தில் இருந்து மீண்டும் ஒரு விண்கலம் வரும்... அதிலிருந்து பல நாய்க்குட்டிகள் டிக்கியை நோக்கி ஓடிவரும்... கழுத்தில் மாட்டியிருக்கும் டிக்கியின் நாய்க்குட்டியிலும் சலனங்கள் ஆரம்பிக்கும்... டிக்கி மகிழ்ச்சியில் உறைந்து போய் விடுவான்... அப்பொழுது ஒரு பாடல் ஆரம்பிக்கும்... சன்னி... கேட்கும் போது ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நம் மனதில் கொப்பளிக்கும்... அந்த பாடல் வரிகள் கீழே உள்ளன... படித்துப் பாருங்கள்...
இந்த பாடலைக் கேட்கும் போது, 2020ஆம் ஆண்டை விட 2021 அட்டகாசமாக அமையும் என்பதில் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது... என்னதான் நடக்கும் பார்த்துடலாம்... சிரித்த முகத்துடனே வரும் ஆண்டையும் எதிர்கொள்வோம்... புத்தாண்டு வாழ்த்துக்கள்...
"Sunny"
Sunny, yesterday my life was filled with rain.
Sunny, you smiled at me and really eased the pain.
The dark days are gone, and the bright days are here,
My Sunny one shines so sincere.
Sunny one so true, I love you.
Sunny, thank you for the sunshine bouquet.
Sunny, thank you for the love you brought my way.
You gave to me your all and all.
Now I feel ten feet tall.
Sunny one so true, I love you.
Sunny, thank you for the truth you let me see.
Sunny, thank you for the facts from A to Z.
My life was torn like a windblown sand,
And the rock was formed when you held my hand.
Sunny one so true, I love you.
Sunny
Sunny, thank you for the smile upon your face.
Sunny, thank you for the gleam that shows its grace.
You're my spark of nature's fire,
You're my sweet complete desire.
Sunny one so true, I love you.
Sunny, yesterday my life was filled with rain.
Sunny, you smiled at me and really eased the pain.
The dark days are gone, and the bright days are here,
My Sunny one shines so sincere.
Sunny one so true, I love you.
I love you.
Sunny CJ7 படப்பாடல் இன்று நினைத்துக் கொண்டிருந்தேன்... பின்னர் தான் தெரிந்தது அது ஒரு பழைய இசை ஆல்பத்தில் இருந்து எடுத்தது என்று...
Boney M...
அப்படியே நூல் பிடித்தாற்போல் Boney Mஇன் ஒவ்வொரு பாடலையும் கேட்டுப் பார்த்தால், அனைத்தும் முன்பு ஏதோ ஒரு சமயத்தில் கேட்டதாக, மிக நெருக்கமாகத் தோன்றியது... இரண்டொரு மாதங்களாக Boney Mஇன் துள்ளலிசைப் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்... Maybe, I'm old school... கீழே அவரின் பாடல்கள் சில தந்துள்ளேன்... கேட்டுப் பாருங்கள்... Cheers and Happy New Year...
(பிகு: Bobby Farrell நடனம் போலவே கல்லூரி காலங்களில் என் நடனம் இருந்தது...)
Sunny
https://youtu.be/S-u6qdeaPoE
Rasputin
https://youtu.be/16y1AkoZkmQ
Ma Baker
https://youtu.be/9c5yPIQ3LQI
Daddy Cool
https://youtu.be/doL-_eWN7W4
Rivers of Babylon
https://youtu.be/l3QxT-w3WMo
Hooray! Hooray! It's a Holi-Holiday!
https://youtu.be/ModISbNyQ8I
Bahama Mama
https://youtu.be/y_J3OYH-AAo
Gotta Go Home
https://youtu.be/5ww-pQynEDI
One Way Ticket (Eruption)
https://youtu.be/D4y_acTR0MY
#CoronaQuarantine