The power of prayers...
மொத்தமா முடிச்சு வுட்டானுங்க...
#USElections2024
ஒரு பக்கம் பூஜை புனஸ்காரம் என்றால் மற்றொரு பக்கம் பில்லி சூனியம்... மன்னார்குடி மாமிக்கு heavy support இருக்கு...
மண்ட பத்திரம் டிரம்ப்பே...
#USElections2024
தாமரை (கமலம்) அமெரிக்காவிலும் மலராது...
#USElections2024
பட்டியலில் உள்ள பதின்மூன்றாவது கட்டுப்பாட்டால், தோழர் சீமான் இந்த ஈரானிய உணவு விடுதியில் நுழைய முடியாமல் போகலாம்...
PC: பூனாவில் உள்ள இந்த Irani Cafe உணவகத்திற்கு சென்ற என் தோழி வந்தனா எடுத்து அனுப்பியது...
My friend Vandana Karande was at Irani Cafe, Pune and found this list amidst the menu on the table top...
சொட்டுனா சொக்கிருவோம்...
சொட்டுனா சொக்கிருவோம்...
Charan Amrit - UP: Devotees drink AC water, mistaking it for ‘Charan Amrit’ at Banke Bihari Temple
சொட்டுனா சொக்கிருவோம்...
Weeping Jesus - A man in India is living in exile after being charged with blasphemy for debunking a "weeping Jesus".
News - Jesus wept … oh, it's bad plumbing. Indian rationalist targets 'miracles'
ஏதோ, மார்கெட் விழுந்தா வாங்குறேன்'னு சொன்னியாமே...
#Sensex #Nifty #ShareMarket
பார்றா, அங்க பார்றா... அவனுங்க கம்யூனிஸ்ட்'ங்குற வரைக்கும் தெரிஞ்சு வெச்சிட்டு செவப்பு துண்டு போட்டு impress பண்ணாரு பார்றா, அதான்டா என் தலைவன்...
பிகு: அப்பயும் camera பாத்து thumbs-up பண்றாப்ல... அதான் dedication...
With some students clearing NEET like competitive exams, but failing board exams, this is a good direction... Hail Quality...
//While the board will pass students despite their lower marks, it will not allow them to pursue higher education in Math and Science.//
Maharashtra Reduces Passing Marks For Math And Science In Class 10
போற போக்கை பாத்தா, நிவாரணப் பொருட்களை விட Gelusil தான் அதிகம் தேவைப்படும் போலருக்கே...
#ChennaiRains2024
#ChennaiRains2024
#ChennaiRains2024
விஜய் சேதுபதி'க்கு பதிலா கமல் என்னய்யா கமலு... விசு இருந்துருக்கணும்...
#பெருமுதலாளி
எல்லோரும் ஆசையா திங்கிற லட்டு அசுத்தமாகிடுச்சு'னு ரொம்ப வருத்தத்துல இருந்தோம்...
அப்புறம்...
கோமியம் தெளிச்சிட்டோம்...
ஐயையோ... Crime Rate கூடிட்டே போகுதே...
Shocking..!! Gutka packet found in Tirupati Laddu..!?
லட்டு சாப்பிட்ட தோஷம் போக, இவனுங்க பரிகாரமும் நம்மையே பண்ணச் சொல்வானுங்களே...
குழப்பமான ஆளுக நாங்க... எல்லா கறியும் சாப்பிடுவோம்... ஆனா சில நாட்கள் மரக்கறி மட்டும் சாப்பிடுவோம்...
அப்படிப்பட்ட ஒரு நாளில் சூர்யா பள்ளியில் அவன் நண்பன் கொண்டு வந்த முட்டையை பகிர்ந்து சாப்பிட்டு வந்திருந்தான்... வீட்டுக்கு வந்து சொன்ன போது தலைவி சத்தம் போட்டாள்... அதைப் போன்ற மற்றொரு நாளில் மீண்டும் பள்ளியில் பகிர்ந்து உண்டு வந்திருந்தான்... இந்த முறை சிக்கன்... வீட்டுக்கு வந்து சொன்ன போது தலைவிக்கு முன் தாத்தா முந்திக்கொண்டார்... "ஏன்டா... அம்மா இன்னைக்கு சாப்பிடக்கூடாது'னு சொன்னாங்கல்ல... எல்லாத்தையும் வீட்ல சொல்லிட்டு இருப்பியா... சும்மா இருக்க மாட்டியா... போடா..." என்று சத்தம் போட்டவர், பின் தனியாக சிக்கிய சூர்யாவிடம், "அம்மாவுக்கு பிடிக்கலீல்ல... ஏன்டா சொல்ற... ஜாலியா friendsஓட சாப்டியா, பேசாம இரு... அம்மா வருத்தப்படுற மாதிரி எதுவும் சொல்லாத..." என்று சொல்லியிருக்கிறார்...
இவ்வளவுதான் எங்க புரட்டாசி மரக்கறி மரபு...
Statuary Disclaimer: As a simple Sourashtra Bavvu, புரட்டாசி எல்லாம் நாங்க sincerely follow பண்ணுவோம்...
அதெல்லாம் ஒண்ணும் இல்லேய்... சும்மா புரளிய கிளப்பாதீங்கோ...
டேய்ய்ய்... சாம்பு மவனே... எங்கள எல்லாம் புரட்டாசி விரதம் இருக்கச் சொல்லிட்டு...
இப்படித்தான்... 1857ல, மாட்டுக் கொழுப்பு இருக்கு, பன்னிக் கொழுப்பு இருக்கு'னு கிளப்பி விட்டு பெரிய பஞ்சாயத்து ஆகிப்போச்சு...
இப்ப இருக்கிற சூழ்நிலையில் இதெல்லாம் எடுத்து எழுத கூட கொஞ்சம் பயம்மா இருக்கு... ஆனா, தலைவர் 70, 80 வருடம் முன்னாடியே, இன்னும் கடினமாக இருந்த சமுதாய சூழ்நிலையிலேயே, இதெல்லாம் பேசிட்டு போயிட்டார்... அதனால் தான் அவர் GOAT...
#Periyar146
#SocialJusticeDay
தந்தை பெரியார் தொகுப்பில் இருந்து சில பகுதிகள்...
*****
"மனித வாழ்வின் பெருமை எது?"
ஆசிரியர் : தந்தை பெரியார்
*****
நான் பேசுகிறவைகள் இதுவரை இருந்து வந்த பழக்க வழக்கங்களுக்கு மாறான முறைகளில் இருக்கும். இப்படிக் கூறுவது நான் வேறுயாரையும் ஆதாரங்காட்டியோ, முனிவர்கள் - பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் காட்டியோ, அல்லது பழைய புராணங்கள் கூறுகின்றன என்பதைக் காட்டியோ இல்லை. என்னுடைய மனதிற்குத் தென்பட்டவைகளைக் கூறுகிறேன். “நீ உன்னுடைய மூளைக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்; இல்லையேல் சும்மா இரு,” என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். அன்றி “நீ நம்பத்தான் வேண்டும். நான் கூறுவதுதான் முடிந்த முடிவு. ஆகவே நம்பு! நம்பினால் மோட்சம்! நம்பாவிடில் நரகம்” என்று கூறுவதில்லை.
*****
இதுவரை கூறிய அதிசய அற்புதங்களில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்த அறிவாளி நம் நாட்டு மனிதனாக இருக்கவில்லை. எல்லாம் மேனாடுகளில் தான் பகுத்தறிவாளி தோன்றுகிறான். அயல் நாட்டில்தான் விஞ்ஞானி தோன்றுகிறான்; பெரிய ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனங்களைக் காணும் அறிவு பெற்ற நிபுணர்கள் தோன்றுகிறார்கள்.
ஆனால் இந்நாட்டில் இதுவரை தோன்றியவர்கள் எல்லாரும் பக்தர்கள், பரமாத்மாக்கள், கடவுள் அவதாரங்கள், ரிஷிகள், முனிவர்கள்; இப்படிப்பட்ட அயோக்கியர்கள் தான் தோன்றியதாகப் பார்ப்பனப் புராணங்கள் கூறுகின்றன. அதுவும் இன்றி இப்போது நம் கண் முன்பாகவே தோன்றிய மகாத்மா இராமராஜ்யத்தை உண்டாக்கத் தோன்றினார். இன்னும் இப்போதுள்ள மந்திரிகள் அரசியல் தலைவர்கூட காந்தி ஏற்படுத்திய இராமராஜ்யத்திற்குதான் தலைவர்களே அன்றி ஜனநாயக நாட்டிற்குத் தலைவர்கள் அல்லர். இராமராஜ்ஜியத்தில் எந்த முறையில் ஆட்சி செய்யப்பட்டதோ அதே முறையைத்தான் இன்றைய ஆட்சியிலும் கையாளுகின்றனர். இப்படி நம் நாட்டில் ஒன்றுக்கும் உபயோகமற்ற அயோக்கியர்கள்தான் இதுவரைக்கும் தோன்றி நம் நாட்டைப் பாழாக்கிவிட்டனர்.
*****
கடவுளையே உருட்டித்தள்ளி உடைத்து விட்டுப் போய்விடுகிறான்! கடவுளுடைய பெண்டாட்டியை அம்மணமாக விட்டுச் சேலையை அவிழ்த்துக் கொண்டு போய்விடுகிறான். சாமியின் அங்கங்களையே உடைத்துவிட்டுப் போய்விடுகிறான். கடவுளையே உடைத்துச் சுக்கு தூளாக்குகின்றனர். இதுவரை எந்தச் சாமியும் ஒருவனைக் கூட வாய் திறந்து கேட்டதே இல்லை.
*****
நம்முடைய நாட்டு எல்லைக்குள் ஒரு குட்டிக் கடவுள்கூட இருக்கக்கூடாது. கடவுளைக் கூறிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் குஞ்சு கூட இருக்கவும் கூடாது. இவை எல்லாம் நம் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்து கொண்டு எதையும் சிந்திக்கும் அறிவில்லாது இருந்த காலத்தில் தேவைப்பட்டனர். இப்போது இவை தேவையற்றவையாகும். ஆனால் இந்த 1956 ஆம் ஆண்டிலும் அவைகள் இருந்து கொண்டிருக்கின்றன என்றால் அது நம்முடைய முட்டாள் தனத்தைக் குறிக்கிறது என்றே கூறவேண்டும்.
மற்றும் மனிதன் செய்கிற பாவ புண்ணியம் என்பதைப் பற்றிச் சிந்தித்தால் அதனுடைய யோக்கியதையும் வெளிப்படும். புண்ணியம் செய்தவன்தான் மோட்சமடைய முடியும். பாவம் செய்தவன் மோட்ச மடைய முடியாது. ஆனால் பார்ப்பனனுக்குத் தானதர்மம் செய்வதால் அதுவே பெரிய புண்ணியம் என்று நம்பும்படி செய்துவிட்டனர்.
இப்படி இந்து மதத்தில் மட்டும் இல்லை. கிறிஸ்தவ மதத்திலும் இருக்கிறது. பாதிரிகள் கூறுகிறபடி கேட்டால் பாவம் மறைந்து போகுமாம். அதாவது பாவமன்னிப்புச் சீட்டு வாங்குதல் என்ற முறை ஒன்று உண்டு. அதன்படி பாதிரியிடம் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கினால் பாவம் போய்விட்டதாகப் பொருள். இப்படியே பாதிரி பாமர மக்களிடம் பொருளை வாங்கிக் கொண்டு. “நான் உங்கள் பாவத்தைப் போக்க மன்னிப்புச் சீட்டுக்கள் கொடுக்கின்றேன்” என்று மக்களிடம் பணம் சுரண்டிக் கொண்டு வந்தான். இதனால் நாட்டில் நல்லவன் கூட அயோக்கியத்தனம் செய்துவிட்டு மன்னிப்புச் சீட்டு வாங்கினான். எந்தவிதமான அயோக்கியத்தனம் பொய், புரட்டு, கொலை பாதகம் செய்துவிட்டு சுலபமாக மன்னிப்புச் சீட்டு வாங்குவதன் மூலம் அப்படிச் செய்த பித்தலாட்டங்களின் கொடுமையெல்லாம் மறைந்த போய்விடு கின்றவாம்! இந்தத் துணிவின் பேரில் எவனும் சர்வசாதாரணமாகக் கெட்டுப் போக முடிகிறது.
*****
எப்படியோ ஆத்மா என்பதை பற்றிப் புளுகிவிட்டு; அதைநிலை நாட்டுவதற்கென்று ஒன்றன்பின் ஒன்றாகப் பாவ புண்ணியம், மோட்சம், நரகம், மறு ஜன்மம், பிதிர்லோகவாசம், கடவுள், என்றெல்லாம் புளுகிக் கொண்டேபோகும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒரு புளுகை மறைக்க எண்ணற்ற அபாண்ட, அஸ்திவார மற்றதுமானப் புளுகுகள் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எப்படி புளுகவேண்டும் என்றுகூட சிந்தித்துப் புளுகாமல் மலைபோன்ற புளுகும்படி ஆகிவிட்டது. அப்படிக் கூறினால்தான் மனிதன் ஓரளவு நம்புவான் என்பதற்கே ஆகும்.
*****
என்னங்கடா, ஊர்ல இல்லேன்னு எகத்தாளமா... Private videos release பண்ணனும்னா அத நாந்தான் பண்ணனும்... வேற எவனும் பண்ணக்கூடாது...
சில நாட்களா இங்க எதுவும் எழுதல... நடக்குறதெல்லாம் பாத்து எதுவும் எழுதவும் தோணல... Sudharsan H has articulated what I feel... கீழே உள்ள அவரின் பதிவில் உள்ளது தான் என் மனக் குமைச்சலும் கூட...
*****
Random rant... Skip if you are not interested...
இருக்குற வேலைக்கு நடுவுல இந்த யோசனையெல்லாம் தேவையில்ல தான்... ஆனாலும்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடைய மொத்த பட்ஜெட் 63000 கோடி... அதுல இரண்டாவது பகுதிக்கான (phase 2) தொகையா ஒன்றிய அரசு தரவேண்டியது இதுவரைக்கும் 10000 கோடி ரூபாய்கள் கிட்ட... அதை அவங்க தர மறுத்ததால மாநில அரசு 2024-25 க்கான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கியிருக்கிற பட்ஜெட் 12000 கோடி ரூபாய்... மெட்ரோ ரயிலுக்கான முழுச்சுமையும் நம்ம தலைல...
அடுத்தது, Samargra Sikshya abhiyan (அனைவருக்கும் கல்வி) அப்டிங்குற ஒன்றிய அரசுடைய திட்டம்... அதுக்கான திட்டத்தொகை கிட்டத்தட்ட 3000 கோடி... இதுல 60% ஒன்றிய அரசும் 40% மாநில அரசும் ஏத்துக்கனும்னு ஏற்பாடு...
NEP என்னும் புதிய கல்விக்கொள்கையை நாம செயல்படுத்த மாட்டோம்னு சொன்னதுக்காக ஒன்றிய அரசு மேல சொன்ன 60% தொகையில் ஒரு தவணையாக தரவேண்டிய 573 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு தராம நிறுத்தி வெச்சிருக்காங்க... இதனால கிட்டத்தட்ட 15000 ஆசிரியர்களுக்கான அடுத்த மாத ஊதியம் கிடைக்காம போகும்னு சொல்றாங்க... RTE ன்னு சொல்லப்பட்ற கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கிற மாணவர்களுடைய கல்விக்கட்டணமும் பள்ளிக்கு வழங்கப்படாமல் போகலாம்...
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு (நல்ல விஷயம் தான் ஆனா ராஜ்நாத்சிங் வராம, right man in the wrong party டைப் உருட்டு பாராட்டுகளை கனிமொழி MP அவர்கள் வழங்காம இருந்திருக்கலாம்)
அடுத்ததா, இந்த முருகன் மாநாடும் அதை சார்ந்து வெளியிடப்பட்ட தீர்மானங்களும்... ஆரம்பத்துல பாஜக இந்த ரூட்ல வந்தா நாங்க அப்டியே போய் மடக்குவோம்னு ஆரம்பிச்சு கடைசில அவங்களாவே மாறிப்போயிடுற ஆபத்துல இருக்காங்கன்னு தோணுது...
F4 street race பத்தி பேச்சை எடுத்தாலே தாலியறுப்பு உ.பி அல்லது சங்கி ரப்பர் ஸ்டாம்போட வந்து அடிக்க வாய்ப்பிருக்கு... ரேஸ், அதனைத் தொடர்ந்து கிடைத்த exposure, பாராட்டு எல்லாம் சரி தான்... சந்தோஷம் தான்... But at what cost... And don't even ask me about the status of the roads around my house and my daily commute...
கட்டக்கடைசியா அரசுப்பள்ளிகளுக்கு ஆகாவலி ஆன்மிக (அது ஆன்மிகம் கூட இல்ல halfboilதனமான பேச்சு) பேச்சாளர்களையும் insta influencerகளையும் கூட்டிட்டு வந்து மாணவர்கள் கிட்ட பேச வைக்கிறது, முன்னாடி மிமிக்ரி தாமு பேசி பசங்கள அழ வெச்சது எல்லாம் இன்னும் நினைவிருக்கு... இப்போ இந்த விஷ்ணு பையன்... இதுக்கெல்லாம் யார கேள்வி கேக்குறது... யாரு accountable... அதுவும் எதிர்த்து கேள்வி கேட்ட ஆசிரியரை அவன் corner பண்ணி பேசுறதும்ஃ, சுத்தி இருக்கிறவங்க கண்டுக்காம போறதும், உச்சகட்ட எரிச்சல்...
இவ்வளவு பிரச்சனைகளை வெச்சுகிட்டு ஒன்றிய அரசோட இணக்கமா போறதும், அவங்க அமைச்சர்களை புகழ்ந்து பேசுறதும், கவர்னர் விழாவுக்கு போறதும், இந்த முருகன் மாநாட்டு தீர்மானம் மாதிரியான விஷயங்கள்ல கவனம் செலுத்துறதையும் பாத்தா மனசு பதறுமா பதறாதா... கோவம் வருமா வராதா...
என்னவோ போங்க 🥹
Our own Ghost...
#80sKid
கொடைக்கானல் அருகே இருக்கும் பள்ளங்கி கிராமத்தில் உள்ள பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்துக்கு முட்டு கொடுத்த போது...
தமிழ்நாடு அரசு கல்வெட்டுக்கு முன்னாடி ஒரு board... காவி நிலத்தில் கருப்பு சாலை இருப்பதாக...
//Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY), i.e., Prime Minister Rural Roads Scheme// ஹிந்தில சொன்னா புரியாது'னு அவங்களே Englishல விளக்கமும் தந்துருக்காங்க...
என்னய்யா யாருக்கு phone பண்ணாலும் நீ எடுத்து பேசிட்டு இருக்க... உனக்கு பயந்து எல்லாருக்கும் whatsappல call பண்ணி பேசுட்ருக்கேன்யா காலைலேருந்து...
#HarGharTiranga2024
Come on long term investors... Let's get ready...
இந்த வீடியோவின் highlight'ஏ நம் இராணுவ அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களின் அந்த நக்கலான புன்சிரிப்பு தான்...
இந்த பெண் அனைவரையும் ஈர்க்கக் காரணம், அவர் நம் தலைவர் ஆற்றல்மிகு ஆளுமை அண்ணாமலை சாயலில் இருப்பதினால் தான்... அதே உழைப்பு... அதே தேசபக்தி... அதே அழகு... அதே அற்பணிப்பு... That devotional ecstasy...
அண்ணன் புதுப்பேட்டை பார்ட் 2 எடுத்து முடிஞ்சுதும் ஸ்ட்ரெய்ட்டா ராயன் 2 ஆரம்பிச்சிட வேண்டியது தான்...
Bosnia and Herzegovina: நாங்க கடல்ல குளிக்கணும்...
Croatia: நோாாாா...
That "हिंदू खतरे में है" becomes real...
#Hindu_Kkhatre_Mein_Hai
#Budget2024
எதே LGBTQ tax'ஆ... மாமி அதுக்கும் டேக்ஸ் போட்ருச்சா...
~மூதேவி... ஒழுங்கா படி... அது LTCG...
ஏ ஆமா...
#Budget2024
LTCG increased from 10.0% to 12.5%
STCG increased from 15.0% to 20.0%
Traders and Investors over Capital Gains Tax announcement...
அப்புறம்... Old Tax Regime'மா New Tax Regime'மா...?
மனசு சரியில்லேன்னா கோயிலுக்கு போவாங்க... நாத்திகனுக்கு அந்த வாய்ப்பும் இல்ல...
பாஸ்,"கல்யாணத்துக்கு செலவு நிறைய ஆகிருக்குப்பா... இனிமேதான் நாம இன்னும் கடுமையா உழைக்கணும்..."
நானு,"ஸார், ஓகே ஸார்..."
#ஆப்பீஸ்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி Donald Trump தாக்கப்பட்டுள்ளார்... இந்த முயற்சியில் பார்வையாளர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் இறந்துள்ளார்... சுட்டவர் (வசதியாக) இப்பொழுது உயிரோடு இல்லை... So, என்ன காரணம் அல்லது யார் காரணம் என விசாரிக்க முடியாது...
தேர்தல் வெற்றிக்கான நாடகமாகவும் இருக்கலாம்...
நம்மாளுக்கும் இங்க இப்படி ஒண்ணு நடந்தது... ஆனால் பாதிப்பில்லை...
கபட நாடக வேடதாரிகள்...
இவ்வளவு பண்ண மவராசன் நாளைக்கு ரெண்டு நாள் எங்களுக்கு லீவு வுட்ருக்கலாம்...
#ஆப்பீஸ்
இந்த வருட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுதான் poster... இதை வைத்தே ஜெயித்து விடுவார்...
குட்டி சேட்டு கல்யாணம் vs இந்தியன் தாத்தா...
Hard worker & Simple Sudha now be like...
#RishiSunak
400+ ஜெயிச்சு, காங்கிரஸை தூக்கி போட்டு பந்தாடப் போகிறேன்...
-'தண்ணியக்குடி' Ji...
"நா எங்க, எப்படி இருக்க வேண்டியவ தெரியுமா... என்னடா இப்படி இங்க கோத்து விட்டீங்க என்னைய..."
#கல்கி #Kalki
காசுக்கு புடிச்ச கேடு...
#கல்கி #Kalki
படம் பாத்துட்டு உசுரோட வெளிய வந்துட்டேன் டோய்...
#கல்கி #Kalki
மவனுக்கு படம் புடிச்சிருக்கு... வாழ்க்கைல என்னவாகப் போறானோ...
#கல்கி #Kalki
கிளைமாக்ஸ்ல படம் முடியல... ரெண்டாவது பார்ட் வரும் போல...