Madras Institute of Technology (MIT), Anna Universityயில் Instrumentation Engineering படித்தேன்... நான் படித்த போது வருடம் இரண்டாயிரம் கல்விக் கட்டணம் என்று ஞாபகம்... கிராமத்தில் இருந்து வந்த ஏழை மாணவர்களும் அனேகம் இருந்தார்கள்... யாரும் பெரிதாக கடன் இல்லாமல் படித்தோம்... அதனாலேயே குறைந்த சம்பளம் என்றாலும், பிடித்த துறையில் காத்திருந்து நுழைய முடிந்தது... நான் முதலில் மும்பையில் ஒரு பெட்ரோல் pumpல், மாதம் 4000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து எனக்கான துறையில் முன்னேறியுள்ளேன்... கடன் வாங்கி படித்திருந்தால் வேறு துறையில் அதிக சம்பளத்திற்காக எனக்கு பிடிக்காத வேலையை செய்ய வேண்டி இருந்திருக்கலாம்... கல்விக்கு கடன் வாங்கத் தேவையில்லாமல், குடும்பத்தின் உயர்விற்கும் கல்லூரி மிக முக்கிய பங்கு அளித்துள்ளது... அந்தக் கல்லூரியை, 'தரம்' என்ற சாக்கில், மாநில அரசு இழந்து கொண்டிருக்கிறது...
ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிக்கொண்டிருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்... NEET மூலம் மருத்துவக் கல்வியை இழந்த ஏழை மாணவர்கள், இப்பொழுது பொறியியல் கல்வி வாய்ப்புகளையும் இழக்க தொடங்குவார்கள்... பத்து வருடங்கள் கழித்து புலம்பி ஒன்றும் ஆகப் போவதில்லை...
வாழ்த்துக்கள்...
#SaveAnnaUniversity
#CoronaQuarantine