கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 27, 2020

அடப்பாவிகளா... அண்ணாமலைய அடிச்ச அடிக்கு, அமேசான்காரன் ஆட்டுக்குட்டிய கொண்டாந்து ஆன்லைன்ல வாங்கச் சொல்றான்... பேரைப் பாத்தா ஜெர்மன் ஆடு மாதிரி இருக்கு... இத வெச்சி எப்படி நா ஆத்மநிர்பர் பண்ண..? இதுல multicolour மற்றும் 4+ star rating வேற...

#CoronaQuarantine

20200727_194843.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 26, 2020

அத்தன சுவரொட்டியும் வித்துப்போயிருச்சு'னு சொன்னா எப்படி பாய்... நாம அப்படியா பழகிருக்கோம்... அய்ய்யோ...

#CoronaQuarantine

FB_IMG_1595741321959.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 23, 2020

இந்துத்துவம் என்ன செய்கிறது? பண்டைய இந்தியா பற்றிய நம்பவே இயலாத மாய புருடாக்களை திரிக்கிறது. அக்காலகட்டத்தின் அவலங்களை வசதியாகக் கடந்து செல்கிறது. அவற்றை சுட்டிக்காட்ட முயல்பவர்கள் மேல் சேறு வாரித் தூற்றுகிறது.

கற்பனைகளையும் பொய்க்கதைகளையும் சேர்த்துப் புனைந்த ஒரு சித்தாந்தம்தான் இந்துத்துவம். செக்யூலரிஸம், தேசத்தை முன்னேற்றப் பாதையில் - கல்வி, அறிவியல், பொருளாதாரம், சமூக வளர்ச்சி, சமூக நீதி என்று மாற்றுப்பாதையில் - பயணிக்க வைத்துக்கொண்டிருக்கிற வேளையில், அதனைத் திருப்பி கலாச்சாரப் பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கைகள், வெறுப்பு, வன்முறை என்று கொண்டு போக முயன்று கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்கு நாம் கிளர்ந்து எழ வேண்டும். தொடர்ந்து மத அடிப்படைவாதத்தைக் கேள்வி கேட்கவேண்டும். நம்முள் படிந்து கிடக்கும் மத, சாதிய வார்ப்புகளை தொடர்ந்து பரிசோதனைக்கு உள்ளாக்கி கொண்டே இருக்க வேண்டும். நவீனங்களை கேள்வி கேட்கலாம். ஆனால் ஒதுக்காமல் அவற்றின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய நவீன மானுட உரிமைகள் பற்றிய புரிதலை கைக்கொள்ள முயற்சிக்கவேண்டும். பண்டைய உலகம் பற்றிய கற்பனைகளுக்கு இடம் தராமல் நவீன அறிவியலின் கொடைகளை புரிந்து கொண்டு வாழ முயல வேண்டும்.

இந்துத்துவம் ஒரு வியாதி; செக்யூலரிஸம் அதற்கான மருந்து.

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 22, 2020

Super Star is the Internet Explorer...

லேட்டு லேட்டு லேட்டு லேட்டு....

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 22, 2020

ஜஸ்ட் பத்து நிமிஷம் முன்னாடி #4YearsOfKabali போட்ட சகோண்ணா be like... 

#CoronaQuarantine

FB_IMG_1595351796103.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 20, 2020

Let me try to explain this more simple...

TN have been allotted 39 MP, Pondicherry 1, Uttarakhand 5, Uttar Pradesh 80, West Bengal 42, Goa 2, Andaman & Nicobar 1, Delhi 7 and so on... This is based on the population of the respective State/UT, which is (deemed) Reservation...

Simple Merit basis would be electing top 543 MPs based on their votes secured or on their winning margin, irrespective of their representative State/UT...

#CoronaQuarantine

20200720_104015.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

July 20, 2020

இந்துத்துவம் தன்னை தேச பக்தியின் உருவகமாக முன்வைக்கிறது. அதன் நிலைப்பாட்டுக்கு சற்றே மாறான நிலைப்பாட்டை மற்றவர்கள் எடுத்துவிட்டால் அவர்கள் தேசவிரோதிகள் ஆகிவிடுகிறார்கள்.

அப்படியானால், இந்துத்துவர்கள் மாபெரும் தேசபக்தர்களா?

ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா ஆகிய அமைப்புகள் துவக்கத்திலிருந்தே தேசியக்கொடியை ஏற்றுக்கொண்டதில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆர்எஸ்எஸ் இரண்டே இரண்டு முறை மட்டுமே தேசிய கொடியை ஏற்றி இருக்கிறது : 14 ஆகஸ்ட் 1947 மற்றும் 26 ஜனவரி 1950. காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் முன்பு தேசிய கொடிகளை கிழித்து மிதித்தும் இந்துத்துவர்கள் 'கொண்டாடினர்'. (பாஜக வளர்ந்து தேசிய அளவில் ஆட்சியை பிடிக்கும் நிலையை எட்டியதும் ஆர்எஸ்எஸ் தனது பிம்பத்தை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் இறங்கியது. அதன் நடவடிக்கைகளில் ஒன்று மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்துவது. ஐம்பது ஆண்டுகள் கழித்து 2002இல் நாக்பூர் தலைமையகத்தில் கொடியேற்றும் வைபவம் துவங்கியது).

அரசியல் சாசனத்தையும் கூட இவர்கள் மதிப்பதே இல்லை. அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 26 ஜனவரியை இந்து மகாசபா 'கருப்பு தினமாக' இன்று வரை அனுசரித்து வருகிறது. இந்த இந்து மகா சபையின் தலைவர்தான் பின்னாளில் பாரதிய ஜன சங்கம் துவக்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. பாஜகவின் பீஷ்ம பிதாமகர்களில் ஒருவர்!

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் இந்துத்துவர்களை எப்படி தேச பக்தர்கள் என்று ஒப்புக்கொள்ள முடியும்? உண்மையில் அவர்களின் தேசபக்திதான் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் அல்லவா?

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

-Sridhar Subramaniam

கோதை பதிப்பகம்

FB_IMG_1595167831586.jpg