கார்த்திக் நீலகிரி
பசி...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
பசி...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
பயந்தது நடக்கத் தொடங்கியிருக்கிறது...
//ஒரு கட்டத்தில் மக்கள் சூறையாட தொடங்கலாம்... முதலில் கடைகள், பிறகு தனி மனிதர்கள் மேல் தாக்குதல்கள் நடக்கலாம்...//
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
மத்திய பிரதேச ஆட்சிய கலைக்கிற வரைக்கும் wait பண்ணி lockdown போட்டானுங்க... இப்ப விக்கிறதெல்லாம் வித்தாச்சு... இனி எக்கேடோ போங்க'னு lockdownஅ (கிட்டத்தட்ட) தொறந்து விட்ருவானுங்க, இலவச கல்வி + இலவச மருத்துவம் தவிர்த்து...
#CoronaQuarantine
Foreign மாப்பிள்ளை கனவுதான் பணால்'னா, இப்ப Government மாப்பிள்ளை கனவும் போச்சா...
#CoronaQuarantine
இந்த ஆல்பத்தில், 'பப்பு' என்று நக்கல் செய்யப்படும் ராகுல் காந்தி இந்திய migrantsகளுடன் பேசி ஆறுதல் தரும் இந்த புகைப்படத்தை பகிர நிறையவே யோசித்தேன்... அரசியலாக பார்க்கப்படலாம் என்பதால்... ஆனால் பாரத தேசத்தின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புலம்பெயர் இந்தியர்களைப் பற்றி உதிர்த்த முத்துக்களுக்கு பிறகு இப்புகைப்படம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
சிறுவயதில் பாட்டி கதை சொல்லுவார்...
ஒரு நாட்டில் ஒரு முரட்டு ரவுடி இருப்பான்... ஒருவழியாக கைது செய்யும் நம் அரசன், அவனைக் கொல்லாமல் சிறையில் வைத்திருப்பான்... பின்னொரு நாளில் எதிரி நாட்டு அரசன் போர் அறிவிக்கும் பொழுது, தூதுவனாக இந்த ரவுடியை நம் அரசன் அனுப்புவான்... தூது பேசத் தெரியாத ரவுடி, எதிரி மன்னன் சபையில் கோபப்பட்டு அந்த அரசனையே கொன்று விடுவான்... எதிரி வீரர்கள் ரவுடியை கொன்று விடுவார்கள்... அரசன் இல்லாமல் எதிரி நாடு போர் தொடுக்காமல் விட்டுவிடும்... வெற்றி நம் அரசனுக்கு... பழியோ அந்த முரட்டு ரவுடியின் மீது...
கதை கிடக்கட்டும்... உண்மையில், இந்த financial stimulus packageக்கு நிதியமைச்சர் தான் காரணம் என்று அனைவரையும் நம்ப வைத்தது நம் மன்னனின் இராஜதந்திர வெற்றி... நிதியமைச்சரும் பதவி தரும் பாதுகாப்பில் முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறார்... சந்தோஷம்... மன்னனின் பிம்பம் இப்பொழுதும் புனிதமானதாகவே பாதுகாக்கப்படுகிறது...
#CoronaQuarantine
திடீரென்ற ஒரு அதிரடி முடிவால் சாலையில் நிற்க வைக்கப்பட்ட இந்தியர்கள், மற்றொரு தயாரற்ற தடாலடி முடிவால் இன்று நடக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்... நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக...
மனிதர்கள் உலகம் முழுவதும் நடந்தே பயணித்திருக்கிறார்கள்... வாழ்ந்த இடங்களில் இருந்து, உணவைத் தேடியும் நல்வாழ்வைத் தேடியுமே அந்த ஆதி பயணங்கள் இருந்திருக்கின்றன... ஆனால், இப்பொழுது மக்கள் தமக்கு வாழ்வளித்த இடங்களை விட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்... ஆதி மனிதன் போல் நடந்தே...
முகமது பின் துக்ளக் காலத்தில் மக்கள் இப்படி நடக்க வைக்கப்பட்டார்கள்... ஆனால் அப்படி நடந்தவர்கள், தில்லி நகரத்து மக்கள் மட்டுமே என்று கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்... இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதும் மக்கள் நடந்து தங்கள் விரும்பிய கனவு தேசத்தை அடைந்தார்கள்... அதில் இரு நாட்டு மக்கள் நடந்தார்கள் என்றும் கொள்ளலாம்... ஆனால் இப்பொழுது நடப்பது இந்தியர்கள்... இந்தியர்கள் மட்டுமே...
கொரனா எனும் கொடும் சுவாசத் தொற்றுநோய் உலகமெங்கும் பரவி மக்களை கொன்று கொண்டிருக்க, நாம் மெதுவாக ஒரு வெளிநாட்டு ஜனாதிபதியை வரவேற்று விழாவெடுத்து கௌரவித்து விட்டு, ஒரு மாநில ஆட்சியை கலைத்து மாற்றி, தலைநகரில் ஒரு மதக் கூட்டத்திற்கு அனுமதி அளித்து, சிவராத்திரி கொண்டாடிவிட்டு திடீரென விழித்து ஊரடங்கு அறிவித்தோம்... மக்கள் முடங்கினர்... தொழில்கள் அப்படி அப்படியே நின்றன... இதில் பிரதானமாக பாதிக்கப்பட்டது ஏழைகள்... அன்றாடங்காய்ச்சிகள்... தினக்கூலியான அவர்கள், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, வேலை வாய்ப்பின்றி சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினர்... இரயில், பஸ் போன்ற எந்த வசதியும் இல்லாததால் நடந்தே ஊர் திரும்பத் தொடங்கினர்... இந்தியாவின் மிக சோகமான நடைபயணம் இது... அந்த வலியின் ஆவணமாக இதைக் கொள்ளலாம்...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
Corona பாதிப்பு புகைப்படங்களில் இந்தப் புகைப்படம் மறக்கவே முடியாத மற்றும் மறக்கவே கூடாத ஒன்றாகும்... உணவு என்பதை வாழ்வின் மிகப்பெரிய privilegeஆக கருதுபவன் நான்... அப்படிப்பட்ட இயற்கை உணவு ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறது... ஊருக்கு செல்ல வசதி இல்லாததால், சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டதால், இந்தியர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தில் தங்கள் ஊரை நோக்கி நடந்து சென்றிருக்கின்றனர்... இரவில் ரயில் தண்டவாளத்திலேயே உறங்கிய (so, இது விபத்து தான், தற்கொலை அல்ல) அந்த குடும்பத்தினர் மீது இரவில் ஏறி அவர்கள் இறந்திருக்கிறார்கள்... அவர்கள் சமைத்து கொண்டு சென்ற, இங்கே சிதறிக்கிடக்கும் உணவு அவர்களின் தொலைந்துபோன நம்பிக்கைக் கீற்று...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
நடந்தே தேயும் இந்தியனின் பாதங்கள்...
Unprepared Indian migration - Corona COVID-19
#AatmaNirbharBharat
#CoronaQuarantine
என்ன, இத்தன ஜீரோ இருக்கு...
#CoronaQuarantine