கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 14, 2020

தல பொறந்த நாளும் lockdownல தான்... கூட்டம் போடாத போ போ... போய் உன் postஅ எல்லாம் அழி...

#CoronaQuarantine

FB_IMG_1586840328012.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 14, 2020

Taskஏ இல்ல... Rejected...

#CoronaQuarantine

20200414_104802.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 14, 2020

ஷாமினி மேடம்... ஏதோ ஆணழகன் போட்டி நடத்துறீங்களாமே... அண்ணன் கார்த்திக் ரெடியாகிட்டாரு... பரிசுக்கோப்பைய எடுத்து வைங்க... இதோ வந்துகிட்டே இருக்கோம்...

#CoronaQuarantine

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 13, 2020

ஏன் இல்லாம... இந்த weekendக்கும் task குடுத்தாரு... நீங்கதான் யாருமே நகைய கழட்டித் தரல...

#CoronaQuarantine

FB_IMG_1586731680767.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 13, 2020

என்னது, ஏப்ரல் முப்பதா..? நா எங்க ஜீ சொன்னாத்தான் கேப்பேன்...

#CoronaQuarantine

FB_IMG_1586789396281.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 13, 2020

எங்கோ ஏதோ ஒரு WhatsApp groupல நடக்குதுன்னு போஸ்ட் படிச்சு smiley போட்டுக்கிட்டு இருந்தேன்... இப்ப எங்க குரூப்'லயே... ஓ மை காட்...

#CoronaQuarantine

FB_IMG_1586790890399.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 13, 2020

அவரா announce பண்றதுக்கு முன்னாடியே எல்லாரும் ஏப்ரல் 30னு declare பண்ணிட்டீங்க... இப்ப வெறுத்துப் போயி இன்னொரு பத்து பதினஞ்சு நாள் சேத்து, May 15 வரைக்கும் lockdownனு சொல்லப் போறாரு பாரேன்... சுத்த ego புடிச்சா ஆளுடா அந்தாளு...

#CoronaQuarantine

FB_IMG_1586356598057.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 12, 2020

MC: Saranji VS

When the Lockdown & WFH Gets Over...

#CoronaQuarantine

FB_IMG_1586701367388.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 12, 2020

Rajan Radhamanalan

லாக் டவுன்றது மொத்தமாவே ப்ரிவிலேஜ்டு செக்டாருக்கு வொர்க்கிங் க்ளாஸ்கிட்டருந்து நோய் பரவிடாம தடுக்கறதுக்கான திட்டமா தான் இருக்கு.  நோயைக் கொண்டு வந்து பாமர ஜனங்களுக்கு பரப்பிவிட்ட அந்த மேல்தட்டு மக்கள் இப்ப தங்களோட சேமிப்ப கரைச்சுகிட்டாவது நார்மல் வாழ்க்கைய கதவச்சாத்திட்டு வாழ ஆரமிச்சிட்டாங்க. கவனிச்ச வரைல அவங்களுக்கு இது இன்னும் சில மாதங்களுக்கு நீடிச்சாலும் சந்தோஷம் தான். 

ஆனா அன்றாடங்காய்ச்சிகளோட நிலைமையப் பாருங்க. அவங்களால இன்னொரு மாசத்த வருமானமில்லாம எப்படி சமாளிக்க முடியும்னு வேண்டாம்? லாக்டவுன முதல்தடவை அறிவிச்சப்ப கூட சில குரல்கள் இவங்களுக்கு ஒரு வழிய பண்ணனும்னு  எழுந்துச்சு. ஆனா இப்ப அதக்கூட காணோம். ஒரே மனசா லாக் டவுன் நீட்டிப்புக்கு நிபந்தனையே இல்லாம ஆதரவு தர்றாங்க.  அதாவது என்னோட சுமைய நீயும் சேந்து சுமக்கணும்., உன்னோட சுமைய நீ மட்டுமே சுமந்துக்கணும்ன்ற மாதிரியான ஏற்பாடு இது. 

லாக் டவுன் கட்டாயம். ஆனா வாடகை வாங்காம இருக்கறது சஜசன்.  நிறுவனங்கள மூடணும்ன்றது கட்டாயம் ஆனா ஊழியர்களுக்கு சம்பளத்த நிப்பாட்ட வேணாம்ன்றது சஜசன். அட அரசாங்கமே நேரடியா சம்மந்தப்படற மின்சாரக் கட்டணம் மாதிரியான விஷயங்கள்ல கூட இன்னமும்  விலக்களிக்களிக்கற உத்தேசத்தக் காணல. 

யூரோப்லயும் அமெரிக்காலயும் பரவின வேகத்துக்கு இங்க பயந்தது நியாயம். இப்ப இங்க அந்த வைரஸோட தாக்கம் பெரிய அளவுல இல்லைன்ற நிலைல  லாக் டவுனே இல்லாம இருந்தா எலைட்டுகள் இன்னும் இரு மடங்கு செலவு பண்ணிட்டு வீடடைஞ்சு இருக்கலாம். எளிய மக்கள் சாகறதுக்கு இருக்கற எத்தனையோ காரணங்களோட இதுவும் ஒண்ணாப் போயிடும். இருக்கறவங்க வயித்தையாவது நிரப்ப முடிஞ்சிருக்கும். 

வாதையில் உழல்றது அவங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்ல ஆனா அதுலயாவது ஒரு ஈக்வாலிட்டி இருக்கணும்.   வர்க்கம் பார்க்கத் தெரியாத வைரஸுடைய தாக்குதலக் கூட அரசாங்கம் அழகா வடிகட்டி விளிம்பு நிலைல இருக்கவனுக மொதல்ல சாகட்டும்ன்ற மாதிரி பண்றத ஏத்துக்கவே முடியலை. அப்பார்ட்மெண்ட் பால்கனி பாடுகளோட தீபத்துக்கு வேணா ஒரு ஹோப் இருக்கலாம். ரோட்டுல  டெண்ட் அடிச்சி வாழறவனும் மெழுகுவர்த்தி தூக்கிட்டு நிக்கணும்னு சொல்றது இல்லாத ஊருக்கு வழி காட்டி ஏமாத்தற வேலை.

#CoronaQuarantine

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

April 11, 2020

வேத பழமையான சௌராஷ்டிரம்

-தெஸ்மா. T.R. பாஸ்கர்

நன்றி: முஹம்மது யூசுப்

https://nvkarthik.com/வேத-பழமையான-சௌராஷ்டிரம்/

தாய்மொழி யாருக்குத்தான் பிடிக்காது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது establish ஆன மொழிகளில் அழியும் நிலையில் உள்ளது சௌராஷ்டிரம் என்று எங்கோ படித்த ஞாபகம். எழுத்து வழக்கத்தில் இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழியானது அழிவதில் ஆச்சரியமில்லை. சௌராஷ்டிர மொழி அந்த extinction வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளதாம் (முதலில் இருப்பது துளு மொழியாம்). ஆனாலும் சௌராஷ்டிர மக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா அல்லது குஜராத்தை சேர்ந்தவர்களா என்ற குழப்பம் சிலருக்கு ஏற்படுவது உண்டு. நெசவுத் தொழிலை குலத் தொழிலாக கொண்ட சமூகம் குஜராத்தில் இருந்து கிளம்பி இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமே பட்டுநூல்காரர் என்று அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்கள். வேறு எந்த மாநிலமும் சௌராஷ்டிரா சமூகத்திற்கு அங்கீகாரம் அளித்ததாக தெரியவில்லை. அந்த வகையில் நான் தமிழ்நாட்டுக்காரனாகவே உணர்கிறேன்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லை எனில், மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் சௌராஷ்ட்ரா சமூகம் அங்கீகாரமின்றி நாடோடி சமூகமாகவே இருந்திருக்கும். ஜாம்நகரில் வேலைக்கு சேர்ந்து குஜராத் சௌராஷ்டிரா பகுதிகளை சுற்றிப் பார்த்த பொழுதும் எனக்கு அங்கு எந்த ஒரு ஒட்டுதலும் ஏற்படவில்லை. இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தார்கள் இன்னும் நெசவு தொழில் செய்கிறார்கள். மாமா எல்லாம் இன்னும் சேலை வியாபாரம் தான் செய்கிறார்கள். என் மாமனார் dyeing industry நடத்தினார். இப்பொழுது எல்லாம் தொழிலை விட்டுவிட்டு மாத சம்பளத்திற்கு படித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். தறி நெசவு செய்யும் சொந்தங்கள் பரமக்குடி எமனேஸ்வரம் மதுரை பகுதியில் இருந்தாலும், அவர்களும் இதிலிருந்து வெகு சீக்கிரம் வெளிவந்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. லாபம் இல்லை அவ்வளவுதான். சரி இந்த சமூகம் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரும் பெரிதாக இதை எழுதி வைத்ததாக தெரியவில்லை. சரித்திரம் இன்றி இனம் அழிந்து தான் போகும். இந்நிலையில் முஹம்மது யூசுப் இந்த சமூகம் பற்றிய ஒரு சிறிய புத்தகத்தை பற்றி எழுதியிருந்தார். Comment செய்தபோது அந்தப் புத்தகத்தை ஈமெயிலில் அனுப்பியும் வைத்தார்.

'வேத பழமையான சௌராஷ்டிரம்' மிகச்சிறிய ஒரு புத்தகம். ஒரே நாளில் படித்து முடிந்துவிட்டது. சௌராஷ்ட்ரா சமூகம் பற்றிய சில விஷயங்கள் இதில் உள்ளது. ஆசிரியர் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் புத்தகம் நிறையவே exaggerate செய்துள்ளது. நிறைய விஷயங்கள் நம்ப கஷ்டமாகவே உள்ளன. சுவாரசியமும் குறைவுதான். தகவல்கள் கோர்வையின்றி வழவழா கொழகொழா என்று, how to say, it's just all over the place. இந்தப் புத்தகத்தை ஒரு referenceஆக எடுத்துக்கொள்ள கூட ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். சௌராஷ்டிர மக்கள் வேண்டுமானால் இதைப் படித்து தங்கள் egoவை கொஞ்சம் boost up செய்துகொள்ளலாம். மற்றபடி, கஷ்டம்தான்.

கொசுறு தகவல்: யூசுப் தனது அடுத்த (மூன்றாவது) புத்தகத்தில் சௌராஷ்டிரா இழையோட எழுதி இருக்கிறாராம். அதனால் சௌராஷ்டிரா பற்றி தேடித்தேடி படிக்கிறார். I am waiting for his book, because I know his writing.

My verdict: (சௌராஷ்டிரர்கள்) ஒரு முறை படிக்கலாம்.

20200411_132736.jpg