கார்த்திக் நீலகிரி
Courtesy: SKP KARUNA
நான் அறிந்த #துக்ளக் கதை.
தொடங்கியதில் இருந்தே துக்ளக் இதழ் ஆனந்த விகடன் அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியானது. சோவின் அரசியல் கருத்துகளால் பல இடர்பாடுகள் வந்தபோதிலும் எஸ்.எஸ்.வாசன் உறுதியாக இருந்து சமாளித்தார். அப்போதுதான் எமெர்ஜென்ஸி வந்தது. பத்திரிக்கைக்கான கச்சா பொருள் பேப்பர். அப்போது அது மொத்தமும் இறக்குமதி என்பதால் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோட்டா முறையில் வந்தது. இப்போது வாசனுக்கு வேறு வழியில்லை. விகடனைக் காப்பாற்ற துக்ளக்கை கைவிட வேண்டியிருந்தது. சென்னையில் வேறு யாரும் துக்ளக்கை அச்சடிக்க முன்வரவில்லை. சோ தற்காலிகமாக பத்திரிக்கையை நிறுத்த முடிவு செய்தார். அப்போது ராம்நாத் கோயங்கா மட்டும் துணிச்சலாக உதவ முன்வந்தார். அச்சடிக்க துவங்கிய அதே இரவில் எக்சைஸ் ரெய்டு தொடங்க, முதல் ஃபாரமே நிறுத்தப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட முதல்வர் கலைஞர் ராஜாராமை அழைத்து "சோ துணிச்சல்காரன். இந்த நேரத்துலே அவனை கஷ்டப்பட விடக்கூடாது. அவனுக்கு சம்மதம்னா, எக்ஸ்பிரஸ் எஸ்டேட்லே இருந்து அப்படியே எல்லா ஃபாரத்தையும் கொண்டு வந்து முரசொலியில் அடிச்சு கொடுத்துடுங்க" என்றார். அதன்படியே மறுநாள் பகலிலேயே (அப்போது இரவில் மட்டும்தான் மெஷின் ஓடவேண்டும் என்பதும் கட்டுப்பாடு) அச்சடிச்சு,மறுநாள் வெளியானது. அடுத்தத்த இதழ்களுக்கு ப்ளாக்லே பேப்பர் வாங்கி ஆங்காங்கே அச்சடிச்சார் சோ! இக்கட்டான சூழலில் முரசொலி உதவியது. அச்சடித்தற்கு பணமும் வாங்க மறுத்துட்டாங்க. தொடர்ந்து அவர்களிடமே உதவி கேட்பது முறையல்ல என்பதால் வேற ஏற்பாடுகளை செய்து கொண்டேன் என்றார் சோ.
இதுவும்தான் வரலாறு.
பிகு: இணைப்பு வீடியோ சோ பற்றியது; இந்த பதிவு பற்றியதல்ல...