கார்த்திக் நீலகிரி
பரவால்ல பாஸ்... யாராச்சும் வேணும்'னே வேலை குடுப்பாங்களா...
#ஆப்பீஸ்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
பரவால்ல பாஸ்... யாராச்சும் வேணும்'னே வேலை குடுப்பாங்களா...
#ஆப்பீஸ்
Meetingதான... நீ போடா... என்னை ஏன்டா கூப்பிடுற...
#ஆப்பீஸ்
ஒரு மணிக்கு meeting வெச்சிட்டு என்ன ஒருத்தனையும் காணோம்... Lunchக்கு போயிட்டானுங்களா...
#ஆப்பீஸ்
பேசி முடிச்சிட்டு உங்க பக்கம் திரும்பிட்டேன்டா... கண்'ணைத் தொறங்கடா...
#ஆப்பீஸ்
#மதிய_meeting_பரிதாபங்கள்...
நாம கடைசியா edit பண்ணது draft 27ஆ, இல்ல draft 41(a)வா..? சொல்றா... அதை தூக்கி final draft 61.3ல போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பலாம்...
தெர்ல ஸார்...
மக்கு சாம்பிராணி... உன்னை on the job training பண்ணலாம்'னு பாத்தா... தத்தி தத்தி... என்னை மாதிரி வளரணும்'னு உனக்கு எண்ணமே இல்லியா... போ... இதை homeworkஆ எடுத்துக்கிட்டு நாளைக்கு காலைல எனக்கு சொல்லு... சரியா... phone பண்ணாத... அண்ணன் தூங்கியிருப்பேன்... message அனுப்புனா போதும்... ஓகேவா...
#ஆப்பீஸ்
எது, original document அனுப்பவா... அது எந்த folderல, என்ன conditionல இருக்கோ...
#ஆப்பீஸ்
என்னாங்கடா... நித்தி photo எல்லாம் whatsappல share பண்றீங்க...
Vote for SPA.
Below post from Pady Nagaraj
எனக்கு பெரியார் தெரியமா? தெரியாது...
எனக்கு அம்பேத்கர் தெரியுமா? தெரியாது...
எனக்கு வரலாற்று அரசியல் தெரியமா? தெரியாது...
ஆனா... சமகால அரசியல் தெரியும்.
வோட்டுப்போடற வயசு வரதுக்கு முன்னாடியே, தமிழ்நாட்டுல யாருக்கு வோட்டுப்போடணும்னு ஆராய்ந்து முடிவெடுக்கற அளவுக்கு சமகால அரசியல் தெரியம்.
2004 எலெக்ஷன்:
0/40 வாங்கின உடனேயே, பறிக்கப்பட்ட பஸ் பாஸ் முதல் அரசு ஊழியர்களை மீண்டும் பணி நியமனம் என அன்றைய ஜெயலலிதாவின் அரசு அடித்த அந்தர் பல்டி நியாபகம் இருக்கிறது. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்து பழகிய ஜெயாவுக்கு ஏன் மக்கள் வாக்களித்தனர் என்ற குழப்பம் வந்தது தான் என்னுடைய முதல் கேள்வி.
சொந்த ஊரிலிருக்கும் பாட்டியிடம் பேச, முதலில் ஃபோன் இருப்பவருக்கு அரை நிமிடத்தில் செய்தி சொலிவிட்டு, மீட்டரில் எவ்வளவு காசு என்று பார்த்துக்கொண்டே பேசியிருக்கிறீர்களா? One India One Rupee திட்டம் கொண்டு வந்து, அதன் பின்பு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வந்து, உட்கட்டமைப்புகள் பலமானது.
பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து, எல்லோருக்கும் பொறியியல் கனவை நனவாக்கிய மாநிலத்தில், "NEET" கொண்டு மருத்துவராகும் கனவை தகர்த்து சாதனைப் படைத்துள்ளார்கள்.
சரி, அதிகம் பின்னோக்கி பயணிக்க வேண்டாம்.
மீண்டும் சமகால நிகழ்வுகளுக்கே வருவோம்!
Demonetization:
ஒரே ராத்திரியில் ஒட்டுமொத்தமா பணப்புழக்கத்துக்கு சமாதி கட்டிட்டு, நம்மோட காசை நாம எடுக்கவே தெருத்தெருவா அலைஞ்ச கதை.
திருமுருகன் காந்தி முதல் யாரெல்லாம் போராட்டத்தை முன்னெடுக்கிறார்களோ அனைவரையும் அடக்குகிற மாநில அரசு, வேறு வழியே இல்லாமல் எங்கேயோ எதிலோ மத்திய அரசிடம் வசமாக மாட்டிக்கொண்டதை மாநில முதல்வரின் குடும்பம் முதற்கொண்டு நன்கு அறியும்.
Archaealogy:
தமிழ்நாடும் இந்தியாவில் ஒரு பகுதி தானே? அப்படியிருக்கையில் ஆதிச்சநல்லூர் - கீழடி ஆய்வுகளை ஏதோ பேய் பங்களா போல பாவித்து, ஆராய்ச்சியை நிறுத்தியது.
Army:
நாட்டின் உயரிய பாதுகாப்பில் கூட மெத்தனம் காட்டி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடுவது.
Union Territories:
பாண்டி மற்றும் டெல்லியை ஆட்டிப்படைப்பது. டெல்லியில் கெஜ்ரிவால் என்ன செய்யதாலும் முட்டுக்கட்டை போடுவது.
Freedom of speech:
ஜல்லிக்கட்டை நடத்தியதற்காக பாராட்டு பத்திரம் வாசித்து முடிக்கும் முன்னர், என்னுடைய மெட்ராஸ் மக்களை அடிக்க ஆரம்பித்தது - ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டு வீழ்த்தி - நேற்றிரவு கோயம்பேட்டில் பேருந்துகளை இயக்காத வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தல்:
கூட படித்தவனும், நன்றாக அரசியல் தெரிந்தவனும் கூட மக்கள் நல கூட்டணிக்கு வாக்கை செலுத்தினான். அப்போதும் அசராமல் திமுகவின் தோழமை கட்சியான காங்கிரசின் கராத்தே தியாகராஜனுக்கு வேண்டா வெறுப்பாக வோட்டளித்தேன். நம்முடைய அரசியல் நடைமுறையில் வாக்காளராக சில சமரசங்களை நாம் செய்தே ஆக வேண்டும்.
Yes! For the sake of argument, one can put a question such as, "how can I trust a candidate who is bad, but the party is good?"
In a democracy, where the multi-party system is in place, one has to see the larger picture and carefully decide on how the state would operate if he gets a good candidate, but a bad Govt at the top. Technically, the other way round can be countered, and in subsequent elections that will be sorted! We have no other option than to do this.
வைகோ, திருமா, கம்யூனிஸ்ட்டுகள் என தனித்துச்சென்ற எல்லோரும் மீண்டும் திமுகவுடன் இருக்கிறார்கள் என்றால், அந்த ஒரு காரணம் போதும் நீங்கள் ஏன் திமுக+ ஆதரவளிக்க வேண்டுமென்று.
தொகுதி பங்கீடு வந்தவுடன், ஸ்டாலின் அதிமான தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் தோழமைகளுக்கு ஒதுக்கிவிட்டு வெறும் 20 தொகுதிகளில் நிற்கிறார் என்கிற பொறுமல் எல்லோரிடத்திலும் இருந்தது. 2011-ல் நடந்ததைப் போல 63 தொகுதிகளை கொடுத்து, 1/4 பங்கு என வரும் சட்டமன்ற தேர்தலில் பிரிக்காமல் இருக்கும்வரை இந்த 1/4 10 தொகுதிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு வழி வகுத்தது என்னைப் பொறுத்த வரை மாஸ்டர் ஸ்ட்ரோக்.
2004-ல நடந்ததைப் போல நாற்பதும் வரவில்லை என்றாலும், தரமான போர்ட்ஃபோலியோக்களை கேட்டுப் பெறலாம்.
இங்கே இவ்வளவு பேர் Neet'க்கு எதிராக போராடுகையில், மாநிலத்தின் முதல் உரிமையான கல்வியை மீட்டெடுப்போம். அது நடந்துவிட்டாலே மீதி எல்லாமும் சாத்தியப்பட்டுவிடும்.
பி.கு - இவ்வளவு காலம் பொறுத்த கமல், இன்னும் சில வருஷங்கள் நன்றாக அரசியல் பாடம் படித்து, பிரகாஷ் ராஜ் அளவிற்கேனும் தெளிவாக அரசியல் பேசினால், அப்போது சிந்திக்கலாம்.
திருமா, சு வெங்கடேசன், ராசா, கனிமொழி என்று எல்லோரையும் நமக்காக அனுப்புவோம்.
நம்முடைய சமகால அரசியலை எதிர்காலம் காறித்துப்பாமல் இருக்க வேண்டி போராடுவோம்.
Vote for SPA.
Corruption is bad... But, lynching in the name of cow is even terrible...
Amidst corruption charges, 2G brought down call charges... What about Rafale prices..?