கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 14, 2018

"நகர மறுக்கும் மன்றோவின் குதிரை!"

-S Arun Prasath

Madras Magazine is at Statue of Thomas Munro

இந்த மன்றோ சிலை பற்றி எப்போதோ படித்த கதை ஒன்று நினைவுக்கு வந்தது...

(வெள்ளைக்கார) தந்தை தன் மகனை அழைத்து வந்து சிலை பற்றி சொல்வது...

இந்தியாவின் சுதந்திரத்துக்கு முந்தைய காலம்... ஆங்கிலேய குடும்பம் ஒன்று பணி நிமித்தம் இந்தியா வந்து தங்கியிருந்தது...

தந்தை மகனை தினமும் இந்த சிலையிடம் அழைத்து வந்து மன்றோ பற்றி கதைகதையாக சொல்வார்...

ஒரு நாள் அவர்கள் சென்னை விட்டு திரும்பி தங்கள் சொந்த ஊர் செல்ல நேரிடும்...

கடைசி முறையாக சிலையை பார்த்துவிட்டு அவர்கள் கிளம்பும் போது மகன் கேட்பான், ''அப்பா, மன்றோ மேல் உட்கார்ந்திருக்கிறாரே... அவர் யார்..?''

FB_IMG_1542207199568.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 13, 2018

கிமு கிபி
-மதன்
கிழக்கு பதிப்பகம்

https://nvkarthik.com/கிமு-கிபி-மதன்/ 

சுரேஷ் அண்ணா வீட்டுக்கு போனப்ப பார்த்துட்டு தூக்கிட்டு வந்தது. இந்த புத்தகம் பத்தி தெரியும். கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, படிச்சதில்ல. ஒழுங்கா படிச்சிட்டு திரும்ப தந்துருவேன்’னு சுரேஷ் அண்ணா என்னை நம்புனதாலும் (இதற்கிடையில், புத்தக copyright என்ன சொல்லுதுன்னா – This book shall not be lent without publisher’s prior consent), மதன் எழுத்து மீது எனக்கு உள்ள ஆர்வத்தாலும் இந்த கிமு கிபி’யை கொண்டுவந்து படிக்க ஆரம்பித்தேன்.

ராகுல சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ போல முதல் சில பகுதிகள் ஆரம்பித்தாலும், அடுத்தடுத்த பகுதிகள் மதனின் ரெகுலர் தனித்தன்மையுடன் வேகமெடுக்கிறது. வரலாறை கதையாக, சுவையாக சொல்வதில் மதன் வல்லவர். இந்த புத்தகமும் விலக்கல்ல. உலகின் தோற்றம், உலகின் முதல் மனிதனின் (பெண்) காலடித்தடம், மனிதன் நடந்து நடந்து உலகம் முழுவதும் பரவிய கதை, ஆதி கால இந்தியா (சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மட்டும் பதினேழு வகையான விதவிதமான யானைகள் காடுகளில் திரிந்தனவாம். இப்ப உலகில் இரண்டே உண்டு – இந்தய மற்றும் ஆப்ரிக்க யானை), கடல் மாற்றத்தால் உலக வரைபடம் மாறிய விதம், நதியொட்டி தோன்றிய நாகரிகங்கள், பூசாரிகள் தோன்றிய விதம், நெருப்பு மற்றும் விவசாயம் தோன்றல் (முதல் விவசாயி ஒரு பெண் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று) என்று அடித்தளம் போடுகிறது இந்த கிமு கிபி. அடுத்தடுத்த பகுதிகள் பல்வேறு நாகரிகங்கள் பற்றியும், மனித வரலாற்றின் முக்கியமான மனிதர்கள் பற்றியும் விரிகிறது.

பாபிலோனியா, அரசர் ஹமுராபி’யின் சட்டங்கள், கில்கெமெஷ் காப்பியம் (மதன் புத்தகதில் தந்த கதை சுருக்கமே அவ்வளவு அற்புதம். சூர்யாவும் வர்ஷாவும் ஆர்வமாய் கேட்டார்கள். முழுக்கதை தேடி படிக்க வேண்டும்), பண்டைய இலக்கியங்கள், பண்டைய கடவுள்கள், எகிப்து நாகரிகம், இந்தியாவின் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ, கிரேக்க நாகரிகம், பாரசீக நாகரிகம் பற்றி சுவையான தகவல்கள் உண்டு. உலகில் முதன் முதலாக சட்டங்கள் இயற்றிய ஹமுராபி, உலக சரித்திரத்தின் தனிப்பெரும் முதல் மனிதன் (First Individual) அக்நெடான், மன்னர் டூட்டாங்க் ஆமென், வரலாற்று நூல்களின் தந்தை ஹிராடெடஸ், மருத்துவத்தின் தந்தை ஹிப்பக்ரடீஸ், தத்துவ மேதைகள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், மாமன்னர் அலெக்ஸாந்தர், ‘300’ புகழ் லியோனிடாஸ், மௌரிய சக்ரவர்த்தி சந்திரகுப்தர், ராஜகுரு சாணக்கியர், பேரரசர் அசோகர் என்று உலக மனிதனின் வழித்தடத்தை வரையறுத்த வரலாற்று நாயகர்கள் பற்றி சுவைபட கதைகளாக சொல்கிறார் மதன்.

கிமு கிபி படிக்கும்போதே சில பகுதிகள் முகநூலில் பகிர்ந்தேன். அவை கீழே:

https://www.facebook.com/nvkarthik/posts/10217743637599984

https://www.facebook.com/nvkarthik/posts/10217743884686161

https://www.facebook.com/nvkarthik/posts/10217743973968393

இந்த கிமு கிப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் ‘உதவிய நூல்கள்’ என்று மதன் ஒரு பட்டியல் போடுகிறார். அந்த பட்டியலை படிக்கும்போது எவ்வளவு (maybe கடினமான சுவையற்ற) நூல்களை படித்து இந்த கிமு கிபி’யை சுவையாக தந்துள்ளார் என்று புரிகிறது. அந்த புத்தக பட்டியல் கீழே:

• The Dawn of Man – Steve Parker
• The Rise of Mammals – Michael Benton
• The Vedic People – Rajesh Kochhar
• The celestial key to Vedas – Siddharth
• Pre History (India) – Irfan Habib
• Ancient Civilizations – Timothy Roberts
• The Lessons of History – Will and Ariel Durant
• Secrets of Indus Valley – R.Rajagopalan
• Land of the Nile – Torstar Books
• Egypt under the Pharos – Desmond Stewart
• The story of Philosophy – Bryan Magee
• Short History of the World – Geoffrey Blainey
• A History of India – Romila Thapar
• India & World Civilization – D.P.Singhal
• Asoka – Vincent A.Smith

My verdict: உங்கள் நூலகத்தில் வைத்து பாதுகாக்கவும்.

கிமு கிபி front.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 12, 2018

ஒரு போட்டோ வந்துட்டா போதும்... அரை மணி நேரத்துக்கு வாட்ஸப் களை கட்டீருது...

#Reporter

FB_IMG_1542030643308.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 12, 2018

அந்த ஏழு நாட்கள்...

எந்த ஏழு நாட்கள்..?

2018-11-12_21.40.34.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 10, 2018

This seems to be the audience reaction just after 30 minutes into Thugs of Hindostan...

Thugs of Hindostan review 

Screenshot_20181110-191548.png
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 09, 2018

#இல்லறமதிகாரம்

IMG_20181109_111112.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 09, 2018

அதுல என்ன பெருமை..?

#96

2018-11-09_22.44.28.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2018

49-P தெரியுது, Indian embassy எங்க'னு தெர்ல..? இதுல சுந்தர் பிச்சை reference வேற...

#சர்கார்

FB_IMG_1541622870837.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

November 08, 2018

திரு சேகர் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்... ஆனால், அவரது நகைச்சுவை உணர்வு கேள்விக்கப்பாற்பட்டது...

#Demon

S Ve Sekar நக்கீரன் interview Demonetisation 

Screenshot_20181108-083753.png