கார்த்திக் நீலகிரி
Facebook'க்கு..? அதும் நைட் ரெண்டு மணிக்கு...?!
#இல்லறமதிகாரம்
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
Facebook'க்கு..? அதும் நைட் ரெண்டு மணிக்கு...?!
#இல்லறமதிகாரம்
தகுதியில்லாத பலரால் ஆளப்படும் (ஜனநாயக) நாடு உருப்படாமல் போய்விடும் என்பது பிளேட்டோவின் கருத்து! நாடாளத் தேவையான அறிவாற்றல், பயிற்சி எதுவும் இல்லாதவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்ற அடிப்படை விஷயம் கூட தெரிய வாய்ப்பில்லை என்கிறார் பிளேட்டோ.
'பதவி சுகம் வந்தவுடன் உடனடியாக சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் தான் அரசியல்வாதிகள் குறியாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்படுகிற பேச்சுகளுக்கும், போராட்டங்களுக்கும் அடிமையாகி அவசர முடிவுகள் எடுத்து நாட்டின் நீண்டகால நன்மையை கெடுதல் விளைவிக்கும் இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!' என்கிற கருத்தை பிரச்சாரம் செய்தார் பிளேட்டோ.
கிமு கிபி
-மதன்
கிழக்கு பதிப்பகம்
பாபிலோன் மன்னர் ஹமுராபி! உலகின் முதல் பெரும் சக்கரவர்த்தி அவனே!
மெஸபொடேமியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜேக்கஸ் த மார்டின் ஏழடி நீளக் கல்வெட்டு ஒன்றைத் தோண்டியெடுத்தார். இன்றளவும் பிரமிப்பூட்டும் ஹமுராபியின் சட்டங்கள்தான் அந்த கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்தன!
ஹமுராபி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை திட்டவட்டமான சட்டங்கள் எதுவுமே இல்லாமல் இருந்தது. அசால்ட்டான 'கட்டைப் பஞ்சாயத்துக்கள்'தான் நடந்தன. யோசித்து யோசித்து ரொம்பவே நுணுக்கமாக ஆயிரக்கணக்கில் சட்டங்கள் இயற்றினார் ஹமுராபி.
உதாரணமாக ஹமுராபியின் சட்டத்தில், ஒருவரை அடித்தால் கூட அபராதம் உண்டு. விஐபியை அடித்தால் அதிக அபராதம்! கடத்தல், கற்பழிப்பு, குழந்தைகளோடு உடலுறவு கொள்ளுதல், போர்க்களத்தில் பயந்து ஓடுவது, திருட்டு, வழிப்பறி கொள்ளை, நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் இதற்கெல்லாம் தண்டனை ஒன்றே - மரணம்! பெற்றோரை கைநீட்டி மகன் அடித்தால் அவன் ஒருவரை ஓங்கி குத்தி அவர்கள் பல் உடைந்தால் பதிலுக்கு குத்தியவர்கள் பல் உடைக்கப்பட்டது. அலட்சியமாக ஆபரேஷன் செய்யப்பட்டு நோயாளி இறந்து போனால் சர்ஜனின் விரல்கள் வெட்டப்பட்டன. சரியாக நோயாளியை கவனிக்காத நர்சுக்குக் கூட பனிஷ்மென்ட் கடுமையாக தரப்பட்டது.
தச்சருக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட வேண்டும், உழைப்பாளர்களுக்கு எவ்வளவு நாட்கள் விடுமுறை தர வேண்டும், மருத்துவர்கள் ஏழைகளிடமும், பணக்காரர்களிடம் என்ன 'ஃபீஸ்' வாங்க வேண்டும்... இப்படி ஒவ்வொன்றுக்கும் ரூல்ஸ் போடப்பட்டன!
ஆச்சரியமான ஒரு சட்டம் - வீடு கொள்ளையடிக்கப்பட்டு குறித்த காலத்துக்குள் காவலர்கள் கைது செய்யாவிட்டால், அந்தக் காவலர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு திருடப்பட்ட தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிர்வாகம் தந்து compensate செய்ய வேண்டும்!
பிகு: 1900ல் ஜேக்கப்ஸ் தோண்டி எடுத்த இந்த பிரமிப்பான கல்வெட்டை தற்போது பிரான்சில் உலகப் புகழ்பெற்ற லூவர் மியூசியத்தில் நாம் பார்க்க முடியும்.
கிமு கிபி
-மதன்
கிழக்கு பதிப்பகம்
அக்நெடான் (Akhenaten) மறைந்த பிறகு பூசாரிகள், டூட்டாங்க் ஆமென் (Tutankhamun) என்ற 10 வயது சிறுவன் ஒருவனை அரியணையில் தூக்கி அமர்த்தினார்கள். சற்று வயது கூடியவுடன் பலம் கொண்ட பூசாரிகளை எதிர்த்து நிமிர்ந்து நிற்க அந்த இளம் மன்னர் முயற்சி செய்திருக்க கூடும். ஒரு நாள்... 20 வயது நிரம்பிய அந்த இளம் மன்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். என்ன நிகழ்ந்திருக்கும்? தெரியவில்லை!
சிலகாலம் படுக்கை அறையிலேயே சிறைவைக்கப்பட்டு 'மன்னருக்கு உடல்நிலை சரியில்லை!' என்கிற பொய்த் தகவலை ஊரெல்லாம் பரப்பிய பிறகு ஓர் இரவு டூட்டாங்க் ஆமெனைக் கட்டிப்பிடித்து உட்கார வைத்து, இரக்கமில்லாமல் தடியால் ஓங்கி பின்னந்தலையில் அடித்து பூசாரிகள் கொலை செய்திருக்கக் கூடும். பிற்பாடு, மன்னரின் உடலை 'மம்மி'யாக பதப்படுத்தியவர்களின் வாய் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்!
பிகு: இங்கு மம்மி என்பது அம்மா அல்ல. எகிப்திய மம்மி.
கிமு கிபி
-மதன்
கிழக்கு பதிப்பகம்
தல தல'ன்னீங்க... ஏன்டாப்பா... தளபதியும் queueல நின்னு தான வோட்டு போடுறாரு...
#சர்கார்
என்னது... இன்னைக்கு ஆப்பீஸ் வந்துருக்கீங்களா'வா..?
நான்'லாம் கடின உழைப்பாளி ப்ரோ...
#ஆப்பீஸ்
மித்ரோன்...
என் 15 லட்சம்...
எனக்குள் பேசுகிறேன்
-பாலகுமாரன்
ஆனந்த நாவல்
கதை சொல்வதில் பாலகுமாரன் ஒரு வகை. கதைகள் மூலம் அட்வைஸ் மயமாக இருந்தாலும் அது 'சாட்டை அப்பா' சமுத்திரகனி உபதேசம் போல் இருக்காது. நெடுநாள் தோழி அல்லது வயது முதிர்ந்த பெரியவர்கள் உடனான உரையாடல் போல் எனக்கு படும். கல்லூரி காலத்தில் காதற்பெருமான் மற்றும் காதல் அரங்கம் முதலில் படித்ததாக நினைவு. பின் நிறைய பாலகுமாரன் படித்தேன். Saravana Prabhu மற்றும் Senthilkumar Arumugam எனக்கு நிறைய புத்தகங்கள் வழிகாட்டி வந்தார்கள். பாலகுமாரன் வாசிப்பு கட்டாயமாக என் மனதில், வாழ்வில், வாசிப்பில் மாற்றம் கொண்டு வந்தது. சமூக நாவல்கள் விட இவரது சங்க கால நாவல்களே என்னை மிக ஈர்த்தது. கடைசியாக வாசித்த இவரது 'உடையார்' ஒரு extreme நிறைவை தந்தது. சோழனுடன் நானும் வாழ்ந்து பெரிய கோவில் எழுவதை பார்த்தேன். முடிவில் சோழன் விலகும் போது அப்படி அழுதேன். (வேதாரண்யத்தில் அப்பா வேலை பார்த்த போது, தஞ்சை வழியாக ஐம்பது முறைக்கும் மேல் மதுரை சென்றிருக்கிறேன். இதுவரை பெரியகோவில் சென்றதில்லை.) உடையார் தாக்கம் மறக்க பிடிக்காது பாலகுமாரனின் வேறு புத்தகங்கள் படிக்காமல் இருந்தேன். ('கங்கை கொண்ட சோழன்' வாங்கி மாமாங்கமாச்சு. இன்னும் படிக்கல) இப்பொழுது ஏதோ ஒரு மனநிலையில் libraryயில் இருந்து இந்த புத்தகத்தை துழாவி எடுத்தேன்.
'எனக்குள் பேசுகிறேன்' கதையல்ல. கட்டுரை. பாலகுமாரன் சொல்லிக்கொண்டே வருவது போல. சொற்பொழிவு என்று கூட சொல்லலாம். நிம்மதியாக வாசித்தேன். வாழ்வு பற்றி, மனம், பேச்சு, வாசிப்பு, பொறாமை பற்றியெல்லாம் அமைதியான ஒரு நீரோடை போல சொல்லிக்கொண்டே செல்கிறார். சில சம்பவங்கள் அல்லது கதைகள் மூலமும். ஆத்மார்த்தமாக வாசித்து முடித்தேன்.
ஒரு மணி நேரமாய் 'Maths grammar book' தேடி அழுதுட்ருக்கான்...
#மகனதிகாரம்