கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 17, 2023

"One could be superior to me by knowledge, by economical status, by position or by skills.

But, no one could ever be superior to me just by birth."

- Doctor Thirumavalavan

#HBDDrThiruma

FB_IMG_1692256077702.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 15, 2023

Owing to the peer pressure for Public Display of Patriotism, Happy Independence Day...

images (1).jpeg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 15, 2023

Courtesy: MooknayakDr 

இந்தியா ஒரு விசித்திரமான நாடு. அதன் தேசபக்தர்களும் தேசியவாதிகளும் விசித்திரமான மக்கள்.

தேசபக்தர்களுடைய ஒரே கூச்சல் அவர்களுக்கும் அவருடைய வகுப்பினர்க்கும் மேலும் மேலும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே.

அத்தகைய ஒரு தேசபக்த கூட்டத்தை நான் சார்ந்தில்லாமலிருப்பது எனக்கு மகிழ்ச்சியே தருகிறது.

-பாபாசாகேப் அம்பேத்கர்

FB_IMG_1692080898397.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 15, 2023

பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென கண்கலங்கிய மோதி... செங்கோட்டையே மௌனமாகிய அந்த நொடி...

IMG_20230815_133615.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 15, 2023

நாங்க அழுது பத்து வருஷமாச்சு...

IMG_20230815_185720.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 11, 2023

நாயின் பசிக்கு பிஸ்கட் தந்து பாசத்துடன் கொஞ்சிவிட்டு, பாட்டியின் பாசத்துக்கும் படிப்பவர்களின் பசிக்கும் மதிப்பு அளிக்காத ஹிந்தி பண்டிட்களே இன்றைய நிலைக்கு காரணமென்றால் அது மிகையாகாது...

FB_IMG_1691725339548.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 11, 2023

மொதல்ல சொன்னதுதான்... இந்தியாவின் ஆகப்பெரிய சாபம் ஜாதிய கட்டமைப்பு... கூட படிக்கிற தோழனை, நல்லா படிக்கிறான்'னு பொறாமைப்பட்டு, ஏவலாளாக்கி ஒடுக்கி, வீட்டுக்கு போய் வெட்டி இருக்காங்க... எவ்வளவு வன்மம்... எவ்வளவு விஷத்தை பெற்றோர் ஏத்தி இருக்காங்க... நாசமாப் போங்கடா...

Murugan Kanna 

கல்வி மனித சமூகத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே கல்வி நிலையங்களில் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களும் ஜாதிய பாகுபாட்டோடு நடந்து கொள்கிறார்கள்; படிக்கும் மாணவர்களும் ஜாதியை பாகுபாட்டோடு நடந்து கொள்கிறார்கள்.

நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா - முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரைவுடன் நாங்குநேரி மறவர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். மறவர் சமூக மாணவர்கள் பெருந்தெரு மாணவர்களிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வது தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்திருக்கிறார்கள். இதில் மாணவன் சின்னத்துரை கையில் வைத்திருக்கும் காசு மூலமாக அவர்களுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பதும், ஹோட்டல்களில் வாங்கி தின்றுவிட்டு அதற்கு சின்னதுரையை பணம் கொடுக்க சொல்வதும் நடந்திருக்கிறது. இத்தோடு மாணவன் சின்னத்திரைக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலும் நடந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து நிகழும் ஒடுக்குமுறை ஒரு பக்கம் இருக்க பாலியல் ரீதியான துன்புறுத்தல் சின்னதுரையை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்ற மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சின்னதுரையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டிருக்கிறார் சின்னதுரை சக மானவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார்; ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய மறவர் சமூக மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி இருக்கிறார். 

நடந்த எல்லாவற்றையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரிக்கும் அளவுக்கு வந்துவிட்டது அதனால் இவனை சும்மா விட கூடாது என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள். மாலைக் கருக்கலில் பெருந்தெருவுக்கு வந்த மூன்று மாணவர்களும் சின்னதுரையை எச்சரித்திருக்கிறார்கள்; அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அவர்கள் தாக்குதலில் ஈடுபடாமல் சென்று விட்டனர். பின்னர் இரவு ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரி வெட்டி இருக்கிறார்கள்; தன் மீது விழும் வெட்டை தடுக்க கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னத்துரைக்கு தலையில் ஒரு வெட்டும், வலது கையில் மூன்று வெட்டு,  இடது கையில் இரண்டு வெட்டு, தொடை, பாதம் என பல இடங்களில் பலமான வெட்டு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது இதனை தடுக்க சென்ற சின்னதுரையின் சகோதரிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த தாத்தாவை தள்ளிவிட்டு இருக்கிறார்கள் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். 

தற்போது மாணவன் சின்னத்துரை மற்றும் சின்னத்துறையின் சகோதரி இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; உயிரிழந்த தாத்தா உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இப்படி கொடூரமான செயல்களை செய்யும் அளவுக்கு ஜாதி உளவியல் மேலோங்கி இருக்கிறது. 17 வயதில் ஜாதிய கொடுமைகள், கொலைகள் செய்யும் அளவுக்கு ஏற்படும் மனநிலையை உருவாக்கிய பெற்றோர்களையும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கு முடியும் வரை குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது; குற்றவாளிகளின் குடும்பத்தை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்.

நெல்லை - தென்காசி உள்ளடங்கிய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையின் கீழ் மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்களில் நடக்கும் மாணவப் பிரச்சினைகளை கண்காணித்து அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த கண்காணிப்பு குழுவுக்கு இருக்கிறது; இந்த விவகாரத்தில் சரியாக செயல்படாத கண்காணிப்பு குழுவை விசாரிக்க வேண்டும்.

பெருந்தெருவை சார்ந்த தலித் மக்கள் மறவர் சமூகத்தால் தொடர்ச்சியான ஜாதிய கொடுமைகளுக்கும், பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் வருவதாகவும் சொல்லப்படுகிறது இதனால் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை வன்கொடுமை மிகுந்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.

FB_IMG_1691736532321.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 10, 2023

ரஜினி intro'கு முன்னாடி இதான் மொத frame... எனக்கு சட்டுன்னு கலைஞர் ஞாபகம் வந்துருச்சு...

#Jailer #ஜெயிலர்

IMG_20230810_143417.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 10, 2023

அய்யோ, நா எதுவுமே பண்ணல... எல்லாத்துக்கும் இந்த நேரு தான் காரணம்..‌.

தெரியும்... நீங்க சொல்லாட்டியும், நீங்க எதுவுமே பண்ணலேங்குறது எங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்...

#பார்லிமென்ட்_பரிதாபங்கள்

IMG_20230810_203426.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 10, 2023

எதே, சிலை திருடனுங்க பத்திய கதையா...

#Jailer #ஜெயிலர்

FB_IMG_1691433578613.jpg