கார்த்திக் நீலகிரி
நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்த போது சொன்னான், "ஒரு பண்பட்ட சமூகத்தின் அத்தனை நல்ல குணங்களையும் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வது தான் பார்ப்பனியத்தின் தந்திரம்... இந்த நீதிபதி அதை உணர்ந்து மன்னிப்பு செல்லாதுனு சொல்லிட்டாரு... மன்னிக்க தயாராய் இல்லாத சமூகம்தான் பார்ப்பனியத்தின் தந்திரத்திலிருந்து தப்பித்து பிழைக்கும்..."
தெரியாமல் செய்த தவறுக்குத்தான் மன்னிப்பு பொருந்தும்... தெரிந்தே செய்யும் தப்புக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தானே ஒரு சமுதாயத்தை சீர்படுத்தும்..?
//பெண் பத்திரிகையாளர்கள் குறித்த S.V.சேகர் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில், வழக்கை எதிர்த்து S.V.சேகரின் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...//
//தீர்ப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பின் மூலம் சரிகட்டிவிட முடியாது... சமுக வளைதளத்தில் பார்வேர்ட் செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பாவார்..."//
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு