Possibly one of the உருப்படியான update from WhatsApp... Forward பண்ற சொந்தத்தை எல்லாம் புடிச்சு புடிச்சு report அடிச்சிர வேண்டியது தான் இனிமே...
Science, Aliens and வைகை புயல் are for real...
#Chandrayan3
என்னைப் பொறுத்தவரை உணவு என்பது அப்படியொரு privilege... அதுக்குத்தான் இத்தனை ஓட்டமும்... வயிறு நிறைந்த இந்த பிள்ளைங்க சிரிப்பு போதும் இன்னைக்கு... முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்துக்கு நன்றி... எவ்வளவு அழகான திட்டம்'ல...
நீங்க யாராவது பாத்தீங்களா..?
நரேந்திர மோதி அத்வானி'க்கு காட்டிய மரியாதையை, நிதின் கட்கரி மோதி'க்கு காட்டுகிறார்...
இருவருக்குமான பிரதமர் பதவி போட்டியும் புகைச்சலும் உண்மைதானா...
Producer: விடாமுயற்சிய நாங்க கைவிடப்போறோம்...
Ajith Kumar: கரெக்ட்டுதான்... புரியுதுதான்... ஆனா விடாமுயற்சிய நான் கைவிட்டு ரொம்ப நாள் ஆகுதேஏஏஏ...
அந்தாள மொதல்ல return கூட்னு வாங்கடா... ராஜா ஃபையா'வ எல்லாம் போய் பாத்து வணக்கம் வெச்சிட்ருக்கான்...
யோவ் நெல்சா, ஜஸ்ட் எஸ்கேப்பு...
#Jailer #ஜெயிலர்
இவர உங்கூர்ல என்னன்னு கூப்பிடுவீங்க...?
சூப்பர்ஸ்டார்...
தலைவர் ராமர் கோவில் வேற போறாரு... பாப்போம்...
#JSR
அதெப்படி திமிங்கிலம், தேசிய நெடுஞ்சாலை துறைல (NHAI) மட்டும் CAG இவ்வளோ ஊழல் கண்டுபிடிச்சுருக்கு...
அதான் வாத்யாரே எனக்கும் தெர்ல... பாவம், பிரதமர் ஆகணும்'னு வேற கனவு கண்டுகிட்டிருந்தாரு இந்த நிதின் கட்கரி...
பிகு: இப்படித்தான் ஒரு காலத்துல சுஷ்மா சுவராஜ்'ம் அருண் ஜெட்லி'யும்... see more
Photo of S.Ve. Shekhar மாமா using Social Media apps...
இவர் ஏன் நம்மளையே சீண்டுறாரு... அன்னைக்கு walking போனாரு... இப்ப bike ride போறாரு... வாட் இஸ் திஸ்...
என்னய்யா நராச்சி மாதிரி டிஸைன் பண்ணிருக்கீங்க...
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்...
#TigerKaHukum
யோகி ஆதித்யநாத் பிறந்த ஆண்டு 1972...
'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் பிறந்த ஆண்டு 1950...
தன்னை விட 22 வயது இளையவனின் காலில் விழுபவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் ஒரு கேடு...
Post credits scene...
#Jailer #ஜெயிலர்
என்னை விட அறிவில் உயர்ந்தவன் ஒருவன் இருக்கலாம்; பொருளாதாரத்தில் உயர்ந்தவன் இருக்கலாம்; பதவியில் உயர்ந்தவன் இருக்கலாம்; ஆற்றலில் உயர்ந்தவன் இருக்கலாம்.
ஆனால் என்னை விட பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் என்று இருக்கவே முடியாது!
- முனைவர் திருமாவளவன்
#HBDDrThiruma
"One could be superior to me by knowledge, by economical status, by position or by skills.
But, no one could ever be superior to me just by birth."
- Doctor Thirumavalavan
#HBDDrThiruma
Owing to the peer pressure for Public Display of Patriotism, Happy Independence Day...
Courtesy: MooknayakDr
இந்தியா ஒரு விசித்திரமான நாடு. அதன் தேசபக்தர்களும் தேசியவாதிகளும் விசித்திரமான மக்கள்.
தேசபக்தர்களுடைய ஒரே கூச்சல் அவர்களுக்கும் அவருடைய வகுப்பினர்க்கும் மேலும் மேலும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே.
அத்தகைய ஒரு தேசபக்த கூட்டத்தை நான் சார்ந்தில்லாமலிருப்பது எனக்கு மகிழ்ச்சியே தருகிறது.
-பாபாசாகேப் அம்பேத்கர்
பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென கண்கலங்கிய மோதி... செங்கோட்டையே மௌனமாகிய அந்த நொடி...
நாங்க அழுது பத்து வருஷமாச்சு...
நாயின் பசிக்கு பிஸ்கட் தந்து பாசத்துடன் கொஞ்சிவிட்டு, பாட்டியின் பாசத்துக்கும் படிப்பவர்களின் பசிக்கும் மதிப்பு அளிக்காத ஹிந்தி பண்டிட்களே இன்றைய நிலைக்கு காரணமென்றால் அது மிகையாகாது...
மொதல்ல சொன்னதுதான்... இந்தியாவின் ஆகப்பெரிய சாபம் ஜாதிய கட்டமைப்பு... கூட படிக்கிற தோழனை, நல்லா படிக்கிறான்'னு பொறாமைப்பட்டு, ஏவலாளாக்கி ஒடுக்கி, வீட்டுக்கு போய் வெட்டி இருக்காங்க... எவ்வளவு வன்மம்... எவ்வளவு விஷத்தை பெற்றோர் ஏத்தி இருக்காங்க... நாசமாப் போங்கடா...
Murugan Kanna
கல்வி மனித சமூகத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே கல்வி நிலையங்களில் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களும் ஜாதிய பாகுபாட்டோடு நடந்து கொள்கிறார்கள்; படிக்கும் மாணவர்களும் ஜாதியை பாகுபாட்டோடு நடந்து கொள்கிறார்கள்.
நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா - முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூர் கண்கார்டியா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரைவுடன் நாங்குநேரி மறவர் சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள். மறவர் சமூக மாணவர்கள் பெருந்தெரு மாணவர்களிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வது தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்திருக்கிறார்கள். இதில் மாணவன் சின்னத்துரை கையில் வைத்திருக்கும் காசு மூலமாக அவர்களுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பதும், ஹோட்டல்களில் வாங்கி தின்றுவிட்டு அதற்கு சின்னதுரையை பணம் கொடுக்க சொல்வதும் நடந்திருக்கிறது. இத்தோடு மாணவன் சின்னத்திரைக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலும் நடந்ததாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து நிகழும் ஒடுக்குமுறை ஒரு பக்கம் இருக்க பாலியல் ரீதியான துன்புறுத்தல் சின்னதுரையை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்ற மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சின்னதுரையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டிருக்கிறார் சின்னதுரை சக மானவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார்; ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய மறவர் சமூக மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி இருக்கிறார்.
நடந்த எல்லாவற்றையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரிக்கும் அளவுக்கு வந்துவிட்டது அதனால் இவனை சும்மா விட கூடாது என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள். மாலைக் கருக்கலில் பெருந்தெருவுக்கு வந்த மூன்று மாணவர்களும் சின்னதுரையை எச்சரித்திருக்கிறார்கள்; அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அவர்கள் தாக்குதலில் ஈடுபடாமல் சென்று விட்டனர். பின்னர் இரவு ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின்னர் சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரி வெட்டி இருக்கிறார்கள்; தன் மீது விழும் வெட்டை தடுக்க கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னத்துரைக்கு தலையில் ஒரு வெட்டும், வலது கையில் மூன்று வெட்டு, இடது கையில் இரண்டு வெட்டு, தொடை, பாதம் என பல இடங்களில் பலமான வெட்டு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது இதனை தடுக்க சென்ற சின்னதுரையின் சகோதரிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த தாத்தாவை தள்ளிவிட்டு இருக்கிறார்கள் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
தற்போது மாணவன் சின்னத்துரை மற்றும் சின்னத்துறையின் சகோதரி இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; உயிரிழந்த தாத்தா உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இப்படி கொடூரமான செயல்களை செய்யும் அளவுக்கு ஜாதி உளவியல் மேலோங்கி இருக்கிறது. 17 வயதில் ஜாதிய கொடுமைகள், கொலைகள் செய்யும் அளவுக்கு ஏற்படும் மனநிலையை உருவாக்கிய பெற்றோர்களையும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கு முடியும் வரை குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது; குற்றவாளிகளின் குடும்பத்தை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்.
நெல்லை - தென்காசி உள்ளடங்கிய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் உடற்கல்வி ஆசிரியர் தலைமையின் கீழ் மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு குழு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்களில் நடக்கும் மாணவப் பிரச்சினைகளை கண்காணித்து அதனை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அந்த கண்காணிப்பு குழுவுக்கு இருக்கிறது; இந்த விவகாரத்தில் சரியாக செயல்படாத கண்காணிப்பு குழுவை விசாரிக்க வேண்டும்.
பெருந்தெருவை சார்ந்த தலித் மக்கள் மறவர் சமூகத்தால் தொடர்ச்சியான ஜாதிய கொடுமைகளுக்கும், பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் வருவதாகவும் சொல்லப்படுகிறது இதனால் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை வன்கொடுமை மிகுந்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.
ரஜினி intro'கு முன்னாடி இதான் மொத frame... எனக்கு சட்டுன்னு கலைஞர் ஞாபகம் வந்துருச்சு...
#Jailer #ஜெயிலர்
அய்யோ, நா எதுவுமே பண்ணல... எல்லாத்துக்கும் இந்த நேரு தான் காரணம்...
தெரியும்... நீங்க சொல்லாட்டியும், நீங்க எதுவுமே பண்ணலேங்குறது எங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்...
#பார்லிமென்ட்_பரிதாபங்கள்
எதே, சிலை திருடனுங்க பத்திய கதையா...
#Jailer #ஜெயிலர்
அரங்கமே காலியா கெடந்தாலும் நீதாம்லே சூப்பர் ஸ்டாரு...
#Jailer #ஜெயிலர்
இந்துக்களாய் ஒன்றிணைவோம்...
WhatsAppல கவுண்டர் மகான் சுத்துறாரு...
#Jailer #ஜெயிலர்
நாலு நாளு நிம்மதியா சொகுசுப் பேருந்து பாதயாத்திரை... நடுவுல லீவு போட்டு, ரெண்டு நாள் டெல்லி போய் வாங்கி கட்டிக்கிட்டு வந்தாச்சு... இப்ப மறுபடியும் தொடரப் போகுது...
என்ன Happy Friendship Day மெசேஜ் அனுப்பியிருக்கான்... இவன் இன்னும் உசுரோடத்தான் இருக்கானா...
சட்டம் ஒழுங்கு, மக்கள் பாதிப்பு பத்தியெல்லாம் கவலைப்படாம வேலைக்கு ஆள் வரலேன்னு அழுதுகிட்ருக்கு...
நீங்களே இறங்கி வேலை செய்ங்கடா...
சட்டம் ஒழுங்கு, மக்கள் பாதிப்பு பத்தியெல்லாம் கவலைப்படாம வேலைக்கு ஆள் வரலேன்னு அழுதுகிட்ருக்கு...
நீங்களே இறங்கி வேலை செய்ங்கடா...
நவி மும்பையில் உள்ள Vashi-Mankhurd பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளவிருந்த பெண்மணியை டிராஃபிக் போலீஸார் காப்பாற்றினர்... காவலர்கள் Shivajirao Bachre, Raju Dandekar, Rathod மற்றும் Tambe குதிக்கவிருந்த பெண்மணியை சட்டென்று பிடித்து பாலத்தின் உள்ளே இழுத்தனர்... ஒரு முஸ்லீம் சகோதரரும் அந்த பெண்மணியைக் காப்பாற்ற விரைவதை கவனிக்கிறேன்...
My respects to Fahadh Faasil
தன் 'ரத்னவேல்' character கொண்டாடப்படுது'னு ஆசையா cover photo வெச்சாப்ல... தப்பான casteist promotion'கு தான் அந்த கேரக்டரை use பண்றானுங்க'னு யாராச்சும் அவர்கிட்ட தெளிவுபடுத்தியிருப்பாங்க... தூக்கிட்டாப்ல...
வீரனுக்கு மரணம் ஒரு முறை தான் வரும்... Daily செத்து செத்து பொழைக்குது ஆட்டுக்குட்டி...
#ஆழ்ந்த_இரங்கல்
இது அச்சிடப்பட்ட புத்தகம் இல்லையாம்... அன்ரூல்ட் நோட்புக்'ஆம்... ஷோள்டர இறக்குங்க மக்கா...
"எம்பெருமான் ஸ்ரீ மகரநெடுங்குழைகாதன் துணை..."
-பத்ரி சேஷாத்ரி
"மகரநெடுங்குழைகாதன்..."
ஒரு ஆத்திர அவசரத்துக்கு துணைக்கு அழைக்கலாம்'னா என்ன்ன்னா ஒரு tongue twister... வேற சிம்பிளா ஒரு சாமி கெடைக்கலியா...
ஏ கமலா, இங்க வாப்பா... இந்த பாட்டு suit ஆகுதா பாரு...
Fun Pro Max... ஒரே மஜா தான்...
சொன்னாலும் கேக்குறதில்ல...
இதென்ன பிரமாதம்... இங்க ஒருத்தர் இருக்காரு... அவரோட fans'ஸ பார்த்ததில்லியே...
Pravin Devaraj
சும்மா இருந்த ஆளு மேல 'சாதிய சொல்லி அசிங்கப்படுத்தினார்'னு கேஸ போட்டு, பதவிய பறிச்சு, பார்லிமென்ட்டுக்கே வர விடாம பண்ணிட்டு, ஆசை ஆசையா பல்லாயிரம் கோடி முடக்கி கட்டின அதே பார்லிமென்ட்ல, தான் நுழைஞ்சா நாக்க புடுங்குற மாதிரி எதிர்கட்சிக்காரனுக கேள்வி கேப்பாங்க'னு, கால் வைக்க முடியாத அளவு பதுங்கி வாழுற அந்த ரணமான வலி இருக்கே...
செய்தியைப் பார்த்து தெரிந்து கொள்பவருடன், சமூக வலைதளங்களை பார்த்து தெரிந்து கொள்பவர்...
நீங்களெல்லாம் வெள்ளம் வந்தா என்ன பண்ணுவீங்க...?
இங்க கோவிலுக்கு போய் பஜனை பண்ணிட்ருக்காங்க...
#MumbaiRains
இந்த செய்தியை பதிவிடவே நடுங்குகிறது... ஆனால் இத்தகைய கொடுமைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்...
மணிப்பூர் கலவரத்தில், இரண்டு ஆண்களை கும்பலாக அடித்துக் கொன்றிருக்கிறார்கள்... இரண்டு Kuki-Zo பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக கொண்டு சென்று, வயலில் வைத்து கூட்டாக மானபங்கப்படுத்தி இருக்கிறார்கள்... May 4, 2023 நடந்த இந்த காட்டு'மிராண்டி செயலை வீடியோவும் எடுத்து பரப்பி இருக்கிறார்கள்...
Manipur violence: Top tribal body condemns molestation of two Kuki-Zo tribal women, demands justice
எதே, கூட்டணிக்கு பேரு INDIA'வா... எனக்கு புடிக்கல...
புடிக்கலேன்னா போடா...