2018-11-09

அதுல என்ன பெருமை..?

#96

2018-11-09_22.44.28.jpg

2018-11-08

49-P தெரியுது, Indian embassy எங்க'னு தெர்ல..? இதுல சுந்தர் பிச்சை reference வேற...

#சர்கார்

FB_IMG_1541622870837.jpg

2018-11-08

திரு சேகர் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்... ஆனால், அவரது நகைச்சுவை உணர்வு கேள்விக்கப்பாற்பட்டது...

#Demon

S Ve Sekar நக்கீரன் interview Demonetisation 

Screenshot_20181108-083753.png

2018-11-07

Facebook'க்கு..? அதும் நைட் ரெண்டு மணிக்கு...?!

#இல்லறமதிகாரம்

tenor.gif

2018-11-07

தகுதியில்லாத பலரால் ஆளப்படும் (ஜனநாயக) நாடு உருப்படாமல் போய்விடும் என்பது பிளேட்டோவின் கருத்து! நாடாளத் தேவையான அறிவாற்றல், பயிற்சி எதுவும் இல்லாதவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்ற அடிப்படை விஷயம் கூட தெரிய வாய்ப்பில்லை என்கிறார் பிளேட்டோ.

'பதவி சுகம் வந்தவுடன் உடனடியாக சுய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் தான் அரசியல்வாதிகள் குறியாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்படுகிற பேச்சுகளுக்கும், போராட்டங்களுக்கும் அடிமையாகி அவசர முடிவுகள் எடுத்து நாட்டின் நீண்டகால நன்மையை கெடுதல் விளைவிக்கும் இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!' என்கிற கருத்தை பிரச்சாரம் செய்தார் பிளேட்டோ.

கிமு கிபி

-மதன்

கிழக்கு பதிப்பகம்

images.jpeg

2018-11-07

பாபிலோன் மன்னர் ஹமுராபி! உலகின் முதல் பெரும் சக்கரவர்த்தி அவனே!

மெஸபொடேமியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜேக்கஸ் த மார்டின் ஏழடி நீளக் கல்வெட்டு ஒன்றைத் தோண்டியெடுத்தார். இன்றளவும் பிரமிப்பூட்டும் ஹமுராபியின் சட்டங்கள்தான் அந்த கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்தன!

ஹமுராபி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை திட்டவட்டமான சட்டங்கள் எதுவுமே இல்லாமல் இருந்தது. அசால்ட்டான 'கட்டைப் பஞ்சாயத்துக்கள்'தான் நடந்தன. யோசித்து யோசித்து ரொம்பவே நுணுக்கமாக ஆயிரக்கணக்கில் சட்டங்கள் இயற்றினார் ஹமுராபி.

உதாரணமாக ஹமுராபியின் சட்டத்தில், ஒருவரை அடித்தால் கூட அபராதம் உண்டு. விஐபியை அடித்தால் அதிக அபராதம்! கடத்தல், கற்பழிப்பு, குழந்தைகளோடு உடலுறவு கொள்ளுதல், போர்க்களத்தில் பயந்து ஓடுவது, திருட்டு, வழிப்பறி கொள்ளை, நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் இதற்கெல்லாம் தண்டனை ஒன்றே - மரணம்! பெற்றோரை கைநீட்டி மகன் அடித்தால் அவன் ஒருவரை ஓங்கி குத்தி அவர்கள் பல் உடைந்தால் பதிலுக்கு குத்தியவர்கள் பல் உடைக்கப்பட்டது. அலட்சியமாக ஆபரேஷன் செய்யப்பட்டு நோயாளி இறந்து போனால் சர்ஜனின் விரல்கள் வெட்டப்பட்டன. சரியாக நோயாளியை கவனிக்காத நர்சுக்குக் கூட பனிஷ்மென்ட் கடுமையாக தரப்பட்டது.

தச்சருக்கு எவ்வளவு சம்பளம் தரப்பட வேண்டும், உழைப்பாளர்களுக்கு எவ்வளவு நாட்கள் விடுமுறை தர வேண்டும், மருத்துவர்கள் ஏழைகளிடமும், பணக்காரர்களிடம் என்ன 'ஃபீஸ்' வாங்க வேண்டும்... இப்படி ஒவ்வொன்றுக்கும் ரூல்ஸ் போடப்பட்டன!

ஆச்சரியமான ஒரு சட்டம் - வீடு கொள்ளையடிக்கப்பட்டு குறித்த காலத்துக்குள் காவலர்கள் கைது செய்யாவிட்டால், அந்தக் காவலர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு திருடப்பட்ட தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிர்வாகம் தந்து compensate செய்ய வேண்டும்!

பிகு: 1900ல் ஜேக்கப்ஸ் தோண்டி எடுத்த இந்த பிரமிப்பான கல்வெட்டை தற்போது பிரான்சில் உலகப் புகழ்பெற்ற லூவர் மியூசியத்தில் நாம் பார்க்க முடியும்.

கிமு கிபி

-மதன்

கிழக்கு பதிப்பகம்

210px-P1050763_Louvre_code_Hammurabi_face_rwk.JPG

2018-11-07

அக்நெடான் (Akhenaten) மறைந்த பிறகு பூசாரிகள், டூட்டாங்க் ஆமென் (Tutankhamun) என்ற 10 வயது சிறுவன் ஒருவனை அரியணையில் தூக்கி அமர்த்தினார்கள். சற்று வயது கூடியவுடன் பலம் கொண்ட பூசாரிகளை எதிர்த்து நிமிர்ந்து நிற்க அந்த இளம் மன்னர் முயற்சி செய்திருக்க கூடும். ஒரு நாள்... 20 வயது நிரம்பிய அந்த இளம் மன்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். என்ன நிகழ்ந்திருக்கும்? தெரியவில்லை!

சிலகாலம் படுக்கை அறையிலேயே சிறைவைக்கப்பட்டு 'மன்னருக்கு உடல்நிலை சரியில்லை!' என்கிற பொய்த் தகவலை ஊரெல்லாம் பரப்பிய பிறகு ஓர் இரவு டூட்டாங்க் ஆமெனைக் கட்டிப்பிடித்து உட்கார வைத்து, இரக்கமில்லாமல் தடியால் ஓங்கி பின்னந்தலையில் அடித்து பூசாரிகள் கொலை செய்திருக்கக் கூடும். பிற்பாடு, மன்னரின் உடலை 'மம்மி'யாக பதப்படுத்தியவர்களின் வாய் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்!

பிகு: இங்கு மம்மி என்பது அம்மா அல்ல. எகிப்திய மம்மி.

கிமு கிபி

-மதன்

கிழக்கு பதிப்பகம்

firavun-tutankamon-mezar-1.jpg

2018-11-06

தல தல'ன்னீங்க... ஏன்டாப்பா... தளபதியும் queueல நின்னு தான வோட்டு போடுறாரு...

#சர்கார்

images.jpeg

2018-11-05

என்னது... இன்னைக்கு ஆப்பீஸ் வந்துருக்கீங்களா'வா..?

நான்'லாம் கடின உழைப்பாளி ப்ரோ...

#ஆப்பீஸ்

FB_IMG_1541404761189.jpg

2018-11-01

மித்ரோன்...

IMG_20181101_074954.jpg

2018-11-01

என் 15 லட்சம்...

FB_IMG_1541087967811.jpg

2018-10-30

எனக்குள் பேசுகிறேன்

-பாலகுமாரன்

ஆனந்த நாவல்

கதை சொல்வதில் பாலகுமாரன் ஒரு வகை. கதைகள் மூலம் அட்வைஸ் மயமாக இருந்தாலும் அது 'சாட்டை அப்பா' சமுத்திரகனி உபதேசம் போல் இருக்காது. நெடுநாள் தோழி அல்லது வயது முதிர்ந்த பெரியவர்கள் உடனான உரையாடல் போல் எனக்கு படும். கல்லூரி காலத்தில் காதற்பெருமான் மற்றும் காதல் அரங்கம் முதலில் படித்ததாக நினைவு. பின் நிறைய பாலகுமாரன் படித்தேன். Saravana Prabhu மற்றும் Senthilkumar Arumugam எனக்கு நிறைய புத்தகங்கள் வழிகாட்டி வந்தார்கள். பாலகுமாரன் வாசிப்பு கட்டாயமாக என் மனதில், வாழ்வில், வாசிப்பில் மாற்றம் கொண்டு வந்தது. சமூக நாவல்கள் விட இவரது சங்க கால நாவல்களே என்னை மிக ஈர்த்தது. கடைசியாக வாசித்த இவரது 'உடையார்' ஒரு extreme நிறைவை தந்தது. சோழனுடன் நானும் வாழ்ந்து பெரிய கோவில் எழுவதை பார்த்தேன். முடிவில் சோழன் விலகும் போது அப்படி அழுதேன். (வேதாரண்யத்தில் அப்பா வேலை பார்த்த போது, தஞ்சை வழியாக ஐம்பது முறைக்கும் மேல் மதுரை சென்றிருக்கிறேன். இதுவரை பெரியகோவில் சென்றதில்லை.) உடையார் தாக்கம் மறக்க பிடிக்காது பாலகுமாரனின் வேறு புத்தகங்கள் படிக்காமல் இருந்தேன். ('கங்கை கொண்ட சோழன்' வாங்கி மாமாங்கமாச்சு. இன்னும் படிக்கல) இப்பொழுது ஏதோ ஒரு மனநிலையில் libraryயில் இருந்து இந்த புத்தகத்தை துழாவி எடுத்தேன்.

'எனக்குள் பேசுகிறேன்' கதையல்ல. கட்டுரை. பாலகுமாரன் சொல்லிக்கொண்டே வருவது போல. சொற்பொழிவு என்று கூட சொல்லலாம். நிம்மதியாக வாசித்தேன். வாழ்வு பற்றி, மனம், பேச்சு, வாசிப்பு, பொறாமை பற்றியெல்லாம் அமைதியான ஒரு நீரோடை போல சொல்லிக்கொண்டே செல்கிறார். சில சம்பவங்கள் அல்லது கதைகள் மூலமும். ஆத்மார்த்தமாக வாசித்து முடித்தேன்.

FB_IMG_1540872183925.jpg

2018-10-30

ஒரு மணி நேரமாய் 'Maths grammar book' தேடி அழுதுட்ருக்கான்...

#மகனதிகாரம்

images.jpeg

2018-10-29

இன்று இரவு உண்ணும்போது ரசம் ஏனோ அவ்வளவு பிடித்தது... பத்து நிமிடத்திற்கு மேல் சிலாகித்தேன்... பின்புதான் உண்மை தெரிந்தது...

உண்மையில் அது ரசம் தானாம்...

#இல்லறமதிகாரம்

cho-ramaswamy-759.jpg

2018-10-28

13 September 2013

நாங்கெல்லாம் முருகதாஸுக்கே முன்னோடி...

--- --- ---

அதற்குள் அனைவரின் வரலாறும் கேட்டுத்தெரிந்துகொண்ட சக பிரயாணி என்னிடமும் வந்து, "சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க? ஐ மீன், என்ன வேலை?"

"ரைட்டருங்க... கதை எழுதுவேன்..."

ஏற இறங்க பார்த்தவர், "என்ன மாதிரி கதை?"

"மக்கள்ட பேச்சு கொடுத்து, அவங்க கதைய நைஸா தெரிஞ்சிகிட்டு, அதையே எழுதி காசு பாத்துருவேன்..."

போய் உக்காந்துட்டார்...

FB_IMG_1540734043445.jpg

2018-10-27

ஒரு கோடு போட்டு வாழ்றவன்'ங்க நானு...

FB_IMG_1540607125185.jpg

2018-10-26

பொசுக்கிடும் தீப்பந்தமாய் அவள் நினைவுகள்...

FB_IMG_1540524111334.jpg

2018-10-25

ஆமாங்க... Trade conference போறேன்... Tajல தான் மதிய சாப்பாடு... அட, freeயாத்தாங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1540388129554.jpg

2018-10-25

அவர்ர்ர் Taj conferenceல் இருக்கிறாராம்...

at Taj Hotel, Mumbai 

FB_IMG_1540470043362.jpg

2018-10-25

இவைங்களுக்கு எல்லாம் side artists கூட double doubleஆ தெரியுதாம்...

யப்பா டேய் 'சிறுத்தை' சிவா... எனக்கு இதுல அஜித்'ஏ யாருன்னு தெர்லியேய்யா...

2018-10-25_18.40.20.jpg

2018-10-25

பாஸ் என்ன நெனைப்புல இருக்கார்'னு தெர்ல...

MOM ஒண்ணு forward பண்ணி 'Please attend'னு mail பண்ணிருக்காரு...

#ஆப்பீஸ்

FB_IMG_1539950192490.jpg

2018-10-24

ஜியோ... ப்ளீஸ்... மிச்ச எல்லா நம்பரும் disconnect பண்ணியாச்சு... இப்ப ஜியோ மட்டும் தான் இருக்கு... கடவுளே...

FB_IMG_1540388390671.jpg

2018-10-24

அய்யோ ஷாலினி...

#APU

Cuban Colony comedy 

Screenshot_20181024-225728.png

2018-10-21

Somethings are complete, only because they're unfinished.

#Andhadhun

Screenshot_20181021-041258.png

2018-10-21

Facebook AI seems to be working...

Screenshot_20181021-094050.png

2018-10-20

நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா

– ஆர்.சி.சம்பத்

கவிதா பப்ளிகேஷன்

2001 மும்பை வந்தபோது நான் நந்தினி அக்கா (பெரியம்மா பொண்ணு) வீட்டில் தங்கியிருந்து வேலை தேடினேன். அத்தான் என் கல்லூரி சீனியர். வேலை தேடும் அந்த காலகட்டங்களில் மனதில் ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருக்கும். புத்தகங்கள் ஒரு வடிகால். நந்தினி அக்காவும் புத்தக பிரியை என்பது ஒரு ஆசுவாசம். எப்போதும் ஏதேனும் புது புத்தகம் வீட்டில் கிடைக்கும். அவரது அந்த வாசிப்புப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. சில நாட்கள் முன்பு அவர் வீட்டில் கிடைத்த புத்தகம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றியது. மாபெரும் மேடைக்கலைஞன். முற்போக்கு சிந்தனையாளன். நாடகத்திலும் திரையுலகிலும் அவர் பாணி தனி பாணி. வில்லன். நகைச்சுவையாளன் (எனக்கு பிடித்தது ‘பலே பாண்டியா’ – அதிலும், ‘மாமா… மாப்ளே…‘ பாடலில் அவரது நடிப்பு, ஆஹா ஆஹா). குணசித்திர நடிகர். எல்லாம் தாண்டி உண்மையான மனிதர்.

‘நீயே உனக்கு நிகரானவன்’ என்ற தலைப்பில் நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவைப் பற்றிய இந்த புத்தகம் படிக்க மிகவும் இலகுவாக இருந்தது. அவர் வாழ்வின், இளம் பிராயம் முதல் மரணம் வரையிலான சம்பவங்களின் தொகுப்பு. அவரை பற்றிய சம்பவங்கள், அவரைப் பற்றி பிறர் – பொன்னுசாமிப்பிள்ளை, எம்.ஆர்.ஆர்.வாசு, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, ‘மேக்கப் மேன்’ கஜபதி, எம்.கே.ராதா, இயக்குனர் கே.சங்கர், இயக்குனர் கே.ராஜசேகர் – கூறியவை, எம்.ஆர்.ராதாவே தன்னைப் பற்றி கூறியவை என ஒரு அட்டகாசான தொகுப்பு. படிக்கும்போது அலுப்பின்றி கதைகளாக சென்றது. அதன் மூலம் எம்.ஆர்.ராதாவின் எண்ணவோட்டத்தை நாம் அறிகிறோம். புத்தகத்தில் படித்த சில விஷயங்களை இங்கு தொகுத்துள்ளேன்.

* பெரியாரின் சீடர் போல இருந்த ராதா, கடைசி வரையில் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக சேரவில்லை.

* ராதா நாத்திகர். சீர்திருத்தவாதி. குருவாயூர் மட்டும் ஏனோ பிடிக்கும். குருவாயூரப்பன் சன்னதியில் போய் கண்ணை மூடிக்கொண்டு, தியானத்தில் இருப்பதுபோல் அப்படியே நிற்பார். ஆனால், சாமியைக் கையெடுத்துக் கும்பிடமாட்டார்.

மேலும் வாசிக்க https://nvkarthik.com/நடிகவேள்-எம்-ஆர்-ராதா/ 

ராதா front.jpg

2018-10-19

Biggbossஆல் நாம் கண்ட பலன் இதான்...

#பெருமுதலாளி

FB_IMG_1539924547851.jpg

2018-10-19

#ஆப்பீஸ்

ஸார்... கார்த்திக் லீவ் போட்டு வீட்ல உக்காந்து Facebook posts போட்டுட்ருக்கான் ஸார்...

Me be like: <<வடசென்னை வசனங்கள்>>

FB_IMG_1539914525657.jpg

2018-10-19

Sardar Rajnikanth Patel...

2.0

2018-10-19_14.58.12.jpg

2018-10-17

கார்த்திக்... நேத்து நீங்க மீட்டிங்'ல பாதியிலேயே போயிட்டீங்க... வாங்க, இன்னைக்கு அதை continue பண்ணலாம்...

#ஆப்பீஸ்

FB_IMG_1539770743939.jpg

2018-10-16

MC: SIva RAj

ஒருடைம் நடந்தாத்தான் அது #MeToo, ஒவ்வொரு டைமும் நடந்தா அது #YouToo...!

FB_IMG_1539696817775.jpg

2018-10-16

மதியம் ஆரம்பிச்ச மீட்டிங் சாயங்காலம் வரை இழுத்துச்சா,

முத்தா ரெண்டு கருத்து சொன்னேன்... ''உனக்கு ஓவராயிடுச்சு... நீ கிளம்பு...''னு சொல்லிட்டு அவனுங்க continue பண்றானுங்க...

#ஆப்பீஸ்

FB_IMG_1539697575152.jpg

2018-10-16

#மகளதிகாரம்

இதோட தொடர்ந்து பதினேழு தடவை பாத்தாச்சு...

Varsha Nilagiri dancing கண்ணோடு காண்பதெல்லாம் - Bombay Sourashtra Association - October 2018 

2018-10-16_22.40.04.jpg

2018-10-15

''தேடுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்...''

-தேவன்

டேய், வாடா... Friday பாஸ் Tajல ஏதோ conference போறாராம்... ''பாஸ் பாஸ், நாங்களும் வர்றோம் பாஸ்... Tajல சாப்ட்டு ரெண்டு வருஷத்துக்கும் மேல ஆச்சு பாஸ்...'' டேய் சொங்கி... நீயும் கேள்றா... 

-----

Roadshow on Competition Law

Hotel Trident, Nariman Point, Mumbai.

Address by chief guest

Mr Sudhir Mital

Chairperson

Competition Commission of India

IMG_20181015_105823386.jpg

2018-10-15

96 பாத்தாச்சா'னு கேக்கவேண்டியது... இல்லைய்யா'னு சொன்னா, அப்ப அழகி கூட பாக்கலியா'னு என்னை விட அதிகமாக feel பண்ணி கேக்கவேண்டியது... ப்ளடி ரேஸ்கல்...

FB_IMG_1539611397198.jpg

2018-10-13

டுமீல் டுமீல்...

//A day after India was voted to the United Nations Human Rights Council with an absolute majority, the Uttar Pradesh police seem to have taken the development a little too seriously. In a video that is doing rounds on social media, a cop can be seen imitating the sound of a gunshot to scare away criminals after the pistol held by his colleague jammed up.//

Uttar Pradesh police conducts 'non-violent' encounter in Sambhal; here's how they did it 

IMG_20181014_045738.jpg

2018-10-12

Congress-mukt Bharat...

//Federation of Ministerial Staff president Manoj Saxena said here on Monday that thousands of government employees and their families across the State would vote against the BJP and apprise the people of the ruling party’s failure to fulfil its own promises made in the 2013 election manifesto. “We have taken a pledge for making a ‘BJP-mukt’ Rajasthan,” he said.//

//The employees, who wanted to meet Prime Minister Narendra Modi during the BJP’s rally in Ajmer on Saturday, were prevented from going there and detained by the police at several places.//

Govt. employees call for ‘BJP-mukt Rajasthan’ 

IMG_20181012_081602.jpg

2018-10-12

Mumbai local garba...

YouTube: Mumbai local garba 

garba.jpg

2018-10-12

சொல்லிட்டுதான லீவ் போட்டேன்... இப்ப என்னடா மீட்டிங்'னு எனக்கு போன் பண்றீங்க... போங்கடா... போய் pantry boy'க்கு phone பண்ணுங்கடா...

#ஆப்பீஸ்

FB_IMG_1539316812541.jpg

2018-10-11

இத்தனை வருட முகநூல் பொது வாழ்க்கையில், #MeToo போடக்கூட ஒரு தோழியோ தோழனோ சம்பாதிக்கவில்லை'னு நினைக்கும்போது...

images.jpeg

2018-10-11

VC: Kyoot

Daddy goals...

YouTube: Little boy loves his dad 

fart.jpg

2018-10-11

"hippopotomonstrosesquipedaliophobia"

- Shashi Tharoor

hippopotomonstrosesquipedaliophobia 

7wJH784IbU92rgqHqGad5nWQpvP.jpg

2018-10-10

You said it...!

//“We were very confident that we would never come to power, so we were advised to make tall promises,” said Senior BJP member and Union minister for road and surface transport Nitin Gadkari during the show. “Now that we are in power, the public reminds us of those promises made by us. However, these days, we just laugh and move on.”//

Nitin Gadkari reveals why PM Narendra Modi vowed to put 15 lakh in your account 

IMG_20181010_084527.jpg

2018-10-10

#கண்டபடி_புரிஞ்சிக்கோங்க

Bike long drive goals...

IMG-20181010-WA0044.jpg

2018-10-10

"floccinaucinihilipilification"

- Shashi Tharoor

floccinaucinihilipilification 

images.jpeg

2018-10-10

#Swachh_Bharat

Something which I fail to understand...

//Johny, a 29-year-old manual scavenger, works in a septic tank in Ghaziabad. He merely earns Rs 300 ($4.05) a day to do a job which reduces life expectancy as many manual scavengers develop asthma, skin infections and tuberculosis at work.//

FB_IMG_1539191576643.jpg

2018-10-09

அடேய்... அவன் ஒரே newsஅ ஓராயிரம் எடத்துல பரப்பிட்ருக்கான்டா...

எதுக்கு arrest எதுக்கு releaseனு இப்ப உலகமே கேக்குமேடா...

Court frees arrested senior magazine editor in South India

//A court in southern India released the chief editor of a prominent investigative magazine on Tuesday, hours after police arrested him on charges of publishing material that defamed the state governor.//

//R.R. Gopal was arrested after his influential Tamil-language magazine, "Nakkeeran," published reports linking the state's governor to a recent university sex scandal, said the police official, who spoke on condition of anonymity in line with department policy.//

The Telegraph 

The News & Advance 

The Washington Post 

New Haven Register 

The State 

Tampa Bay Times 

San Francisco Gate 

The Dispatch Argus 

Bowling Green Daily News 

News Oklahama 

hqdefault (5).jpg

2018-10-08

காலங்காத்தால whatsapp தொறந்தா குரூப்ல இப்படி மெஸேஜ் - Happy Monday morning bro...

FB_IMG_1538884303352.jpg

2018-10-07

ஆனானப்பட்ட மாறன் பிரதர்ஸ்'கிட்டயே musics, lyrics'னு சொல்லி காசு வாங்கி ஏமாத்திருக்காய்ங்க...

#சர்கார்

FB_IMG_1538874311177.jpg

2018-10-07

மதுரக்காரய்ங்க'ங்குறது சரியாத்தான் இருக்கு...

அக்கட ச்சூடு... கட்டி வெச்ச புளியோதர பொட்டலத்த பிரிச்சி வெச்சு காலி பண்றத...

#Red_Alert

FB_IMG_1538748463021.jpg