கார்த்திக் நீலகிரி
அது எதுக்குடா ராமர் பிறந்த இடம், கிருஷ்ணர் வாழ்ந்த இடம், லிங்கம் இருந்த இடம்'னு டிசைன் டிசைனா உருட்டிக்கிட்டு... சிம்பிளா, பூமாதேவி இருக்கா'னு சொல்லி மொத்தமா முடிச்சிர வேண்டியதுதான...
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…
அது எதுக்குடா ராமர் பிறந்த இடம், கிருஷ்ணர் வாழ்ந்த இடம், லிங்கம் இருந்த இடம்'னு டிசைன் டிசைனா உருட்டிக்கிட்டு... சிம்பிளா, பூமாதேவி இருக்கா'னு சொல்லி மொத்தமா முடிச்சிர வேண்டியதுதான...
என்ன பாக்குற... நாந்தான் பிரபாகரன்...
As you dig deeper, you'll actually find interesting things... Two unrelated news...
Unrelated News 1:
Railways awards 39,000 train wheels tender to Chinese company604022.cms
//Indian Railways has awarded a contract for supply of 39,000 train wheels to a Chinese company after deliveries from other countries got affected because of the Russia-Ukraine conflict, sources told ET. The tender for solid forged wheels (rough turned) was awarded to TZ (Taizhong) Hong Kong International Ltd., they said.//
//"These wheels are for the Vande Bharat trains. This development can be seen as a fall out of the Russia-Ukraine crisis as there is a dearth of rail wheel suppliers to India," a senior rail ministry official told ET.//
Unrelated News 2:
China building ‘bigger, broader’ 2nd bridge at Pangong Tso that can carry armoured columns
//China's People's Liberation Army aims for multiple routes to counter any possible operations by the Indian forces on the southern banks of the Pangong Tso in the future.//
//Sources in the defence and security establishment said the first bridge — whose construction was started at the end of 2021 and finished last month — is being used as a service bridge for the construction of the second.//
//“The first bridge is being used by the Chinese to station their cranes and bring over other construction equipment. The new bridge, right next to it, is bigger and wider than the one they finished construction of in April this year,” a source said.//
நா முத்துக்குமார்... யுவன்... விஜய் யேசுதாஸ்...
இந்த பாட்டு இருக்கே... இத கேக்குறப்ப எல்லாம் மனசு கனத்துப் போகுது... இன்னும் மறக்கல... பிக் பாஸ் வீட்டில் கவிஞர் சினேகன் அப்பா வந்த போது இந்த பாட்டு போட்டாங்க... அப்புறம் தான் இந்த பாட்டை கேக்க ஆரம்பிச்சேன்... இதோ, இப்ப இந்த பொண்ணு...
ஒரு அப்பனா இந்த பாட்டை முத்துக்குமார் எழுதிட்டு போயிட்டாரு... எல்லா பிள்ளைகளுக்கும்...
-----
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
வளர்ந்ததும் யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை......
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
விடுதலை...
On a right day...
Yeah... Stalin is more dangerous than Karunanidhi...
அரசியல் சாசனத்தின் அடிப்படையில், மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி, வாதங்களுடன் வென்றெடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின்...
Courtesy: Faiz
பேரறிவாளன் விடுதலை..!!!
கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு வைத்த முக்கிய வாதங்கள்
பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்.. மொத்தமாகவே ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை இந்த வழக்கில் வைத்தது.
தமிழ்நாடு அரசு வாதம்
தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி இந்த வழக்கில் ஆஜர் ஆனார். அவர் வைத்த வாதத்தில்,
1. இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.
2. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறது. அதுவே குழப்பங்களுக்கு காரணம். ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. அவர் தன்னை மட்டுமின்றி இந்த விவாகரத்திற்கு உள்ளே குடியரசுத் தலைவரையும் கொண்டு வந்துள்ளார்.
3. ஆளுநர் விருப்பு, வெறுப்புகளை தாண்டி செயல்பட வேண்டும். மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுனர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது. யாரை விடுக்க விடும், விடுவிக்க கூடாது என்று முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் ஆளுநர் தனி முடிவை எடுக்க முடியாது.
4. ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர். அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது
5. அரசியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழையை ஆளுநர் செய்துவிட்டார். ஆளுநர் அமைச்சரவை முடிவை ஏற்கவில்லை. அவர் இப்படி செய்தது பிழை. குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டு வர முடியாது. அது ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம். அதில் அவர்தான் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டு முடிவு எடுக்க வேண்டும்.
6. ஆயுள் தண்டனையை விடுதலை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இந்த விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
7.ஆயுள் தண்டனை பெற்ற கோட்சே சகோதரர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டாரே?. கோபால் கோட்சே தெரியுமா? அவரை அரசு விடுதலை செய்ததே? அவரை போல் இல்லாமல் பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இந்த அதிகாரம் மாநில அரசுக்கு கீழ் வருகிறது. மாநில அரசு இதில் முடிவு எடுக்க முடியும். இதனால் மாநில அரசு நினைத்தால் ஆயுள் தண்டனை கைதிகள் போல இந்த வழக்கிலும் மன்னிப்பு வழங்க முடியும்.
8. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. மாநில அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இதில் நீங்கள் குடியரசுத் தலைவரை கொண்டு வர முடியாது.
9.இந்த விடுதலை தீர்மானத்தில் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார் என்று தமிழ்நாடு அரசு கூறியது.
10. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்புவதாக இருந்தது. அதாவது ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. அமைச்சரவை எடுக்கும் முடிவிற்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்று கூறியது. அதை உச்ச நீதிமன்றமும் வழி மொழிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது...
ஒரு குழந்தை பத்திரமா பிறந்தால், அதைக் கொண்டாடாமல், அந்தக் குழந்தை பத்திரமாக உயிரோடு இருப்பதற்கு காரணம் அம்மாவா, அப்பாவா, டாக்டரா, கல்யாணம் கட்டி வெச்ச பூசாரியா, ஜாதகப்பொருத்தம் பாத்த ஆசாமியா'னு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன தமிழ் நண்டுகள்...
ஒவ்வொரு வெற்றியும் ஒரு team work என்று புரிந்துகொள்ளாத வரையில் நம்மை பிளவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்...
விடுதலைக்கு போராடிய அம்மா...
அற்புதம் அம்மாவா மாப்ள..?
புரட்சி தலைவி அம்மா மாமா...
பிகு: பேரறிவாளன் வழக்கு'னு எடுத்துக்கிட்டாலும் okay... குன்ஹா தீர்ப்பளித்த வழக்கு'னு எடுத்துக்கிட்டாலும் okay... Suit ஆகும்...
ஹிந்துக்கள் எல்லாம் ஒழுங்கா கோயிலுக்கு போயிட்டு வந்துட்ருக்காங்க... இந்த ஹிந்துத்துவா சங்கிங்க மட்டும் மசூதியும் தர்காவுமா ஏறி இறங்கிட்ருக்காங்க...
June 10 மதுரைல மாமியார் வீட்டு விசேஷம்... Conference call போட்டு, சீர்வரிசை என்ன பண்றது'னு பேச ஆரம்பிச்சிட்டாங்க...
#கதம்பகுடும்பம்